Skip to content

Popular

K. Bhagyaraj

Artist profile

K. BhagyarajTamil Actor – Movies List & Song Lyrics

பாக்யராஜ்

About K. Bhagyaraj

பிறப்பு · Born
7 Jan 1953
மறைவு · Died
27 Jun 2026

கே. பாக்கியராஜ் (Bhagyaraj) என அழைக்கப்படும் கிருஷ்ணசுவாமி பாக்கியராஜ் (7 சனவரி 1953 – 27 சூன் 2026) இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகரும், இசையமைப்பாளரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார்.

மேலும் படிக்க ›

இவர் முதன்மையாகத் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியதோடு, பிற இந்திய மொழித் திரைப்படங்களையும் இயக்கி நடித்தார். 25-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களை எழுதி இயக்கியும், 75-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். 1980-களில் தமிழ்த் திரையுலகில் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்-இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். இவர் 'பாக்யா' என்ற தமிழ் வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றியதுடன், பல புதினங்களையும் எழுதியுள்ளார்.

பாக்யராஜ் 1953-இல் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் பிறந்தார். 1970-களின் நடுப்பகுதியில் ஜி. ராமகிருஷ்ணன், பாரதிராஜா ஆகியோரிடம் உதவி இயக்குநராகத் தமிழ் திரையுலகில் பணியாற்றத் தொடங்கினார். திரைப்படங்களுக்குத் திரைக்கதைகள், வசனங்கள் எழுதத் தொடங்கியவர், சிறு வேடங்களிலும் நடித்தார். 1980-களின் முற்பகுதியில், பாக்யராஜ் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார், இவர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் கதாநாயகனாக நடித்தார். தனது சில படங்களின் இந்தி மறு ஆக்கங்களையும் இயக்கினார். 1980-கள், 1990-களின் முற்பகுதியில் தமிழ்த் திரையுலகின் முன்னணித் திரைக்கதை எழுத்தாளர்கள், இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்தார். பிற்காலங்களில், சில படங்களை இயக்கியதுடன், பல படங்களில் துணை நடிகராகவும் நடித்தார்.

பாக்யராஜ் 1989-இல் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகத்தை நிறுவினார். பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். 1990கள் முதல் 2000கள் வரை அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார்.

பாக்கியராஜ் சிறந்த உரையாடல் எழுத்தாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (புதிய வார்ப்புகள், 1979), சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் (முந்தானை முடிச்சு 1983), சீமா வாழ்நாள் சாதனையாளர் விருது (2014) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

1977-ஆம் ஆண்டில் இயக்குநர் பாரதிராஜாவின் முதற் திரைப்படமான 16 வயதினிலேவில் உதவியாளராக, தமது திரை வாழ்க்கையைத் துவங்கினார். பின் பாரதிராஜாவின் இரண்டாவது திரைப்படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதோடு, கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார். பாரதிராஜாவின் மூன்றாவது திரைப்படமான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இரண்டு காட்சிகளில் நினைவில் நிற்கும்படியான, உணவு விடுதிப் பணியாளர் வேடம் ஏற்று நடித்தார். இப்படத்திற்கு வசனமும் எழுதியிருந்தார்.

தனது அடுத்த புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.

ஓர் இயக்குநராகத் தமது முதற் திரைப்படமாக பாக்யராஜ் உருவாக்கியது சுவர் இல்லாத சித்திரங்கள் (1979). (இடைக்காலத்தில் அவர் இராஜேஷ் கதாநாயகனாக அறிமுகமான கன்னிப்பருவத்திலே படத்தில் வில்லன் வேடம் ஏற்றுத் தனது இருப்பைப் பதிவு செய்திருந்தார்). முதற் திரைப்படத்தில் சுதாகர் கதாநாயகனாகவும், சுமதி நாயகியாகவும் நடிக்க, ஒரு குணச்சித்திரப் பாத்திரத்தை பாக்யராஜ் ஏற்றிருந்தார். நகைச்சுவையும், சோகமும் சரிபாதியாக அதில் அமைந்திருந்தது.

அடுத்து, சொந்தத் தயாரிப்பான ஒரு கை ஓசை திரைப்படம் துவங்கி, தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கினார். அஸ்வினி இணைந்து நடித்த இப்படத்தில் அவர் வாய் பேச இயலாத ஊமைக் கதாநாயகனாக மேற்கொண்ட பாத்திரம் இரசிகர்களின் மனம் கவர்ந்தது.

அடுத்து வெளியான மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா ஆகியவை பாக்யராஜின் முத்திரையை முழுமையாகக் கொண்டு வெற்றிப் படங்களாயின. அடுத்து மர்மங்களும் அதிரடியும் கொண்ட அதேநேரம் தனது முத்திரையுடனும் கூடிய ஒரு திரைப்படமாக விடியும் வரை காத்திரு என்னும் திரைப்படத்தை பாக்யராஜ் இயக்கி நடித்தார். பாக்யராஜ் தனது முத்திரையை முழுமையாகப் பதிந்து வெற்றி ஈட்டிய திரைப்படங்களாக அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு போன்றவை கருதப்படுகின்றன. டார்லிங், டார்லிங், டார்லிங் வெற்றிப்படத்தை இயக்கி அதில் நடித்த பூர்ணிமாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார். பின், 1982-ஆம் ஆண்டில் வெளியான முந்தானை முடிச்சு. ஊர்வசி அறிமுகமான இத்திரைப்படம் சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வெள்ளி விழா கொண்டாடியது. இதில் பாக்யராஜ் கையாண்ட சில விடயங்கள் (முருங்கைக்காய் போன்றவை) இன்றளவும் பேசப்படுகிறது. அதேபோல் சின்ன வீடு, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு போன்ற திரைப்படங்களுக்குப் பெரிய வசூலையும், விருதுகளையும் பெற்றுத்தந்தன.

தனது முதல் இரண்டொரு படங்களுக்குப் பிறகு, பாக்யராஜ் அப்போது துணைக்கதாபாத்திரங்களில் நடித்து வந்த "பிரவீணா" என்னும் நடிகையை மணந்தார். இவர் பாக்யராஜின் "இன்று போய் நாளை வா", "மௌன கீதங்கள்", "பாமா ருக்மணி" ஆகிய சில திரைப்படங்களிலும் நடித்தவர். சில ஆண்டுகள் மண வாழ்க்கைக்குப் பிறகு, நோய்வாய்ப்பட்டு பிரவீணா இறந்தார். சில காலத்திற்குப் பின்னர், பாக்யராஜ் அப்போது முன்னணி நாயகியரில் ஒருவராக இருந்த பூர்ணிமா ஜெயராமை மணந்தார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உண்டு. இவர்கள் இருவரையுமே பாக்யராஜ் திரையுலகில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். சரண்யா முதற் திரைப்படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை. சாந்தனு தனது முதற் திரைப்படமான சக்கரக்கட்டி என்னும் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி நடித்தார்.

தொடக்கம் முதலே தன்னை எம். ஜி. ஆரின் இரசிகராக வெளிப்படுத்தியிருந்த பாக்யராஜ், ருத்ரா திரைப்படம் வெளியான காலகட்டத்தில் அ.தி.மு.க. கட்சியில் இணைந்தார். இப்படத்தில், ஒரு பாடல் காட்சியில், ஜெயலலிதா, ம. கோ. இராமச்சந்திரன் ஆகியோரின் உருவப் படங்கள் திரையில் தோன்றுமாறு அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிறகு, அக்கட்சியிலிருந்து வெளியேறி சொந்தக் கட்சியாக எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் துவக்கினார். பின்னர், நாளடைவில் அது கலையவே, தி.மு.க. கட்சியில் சேர்ந்தார்.

1989 பிப்ரவரி 11 அன்று, எம். ஜி. ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை பாக்கியராஜ் தொடங்கினார். இந்தக் கட்சி 1991 கேரளச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அதில் ஒரு வேட்பாளர் 87 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்தக் கட்சி தொடக்கக் கட்டத்திலேயே படுதோல்வி அடைந்தது. பாக்யராஜ் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார்.

2006 ஏப்ரல் 5 அன்று, கட்சித் தலைவர் கருணாநிதி முன்னிலையில், பாக்யராஜ் திமுகவில் இணைந்தார், அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதாவை விமர்சித்தார். பின்னர் தி.மு.க.வில் இருந்து விலகி அரசியலில் பார்வையாளராக இருந்து வந்தார்..

இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர் பாக்யராஜ். முற்றிலும் நகைச்சுவைத் திரைப்படமான இன்று போய் நாளை வா என்னும் திரைப்படத்தில் கூட ஜெயகாந்தன் எழுதிய 'சமூகம் என்பது நாலு பேர்' என்னும் சிறுகதையைப் பற்றிய ஒரு குறிப்பு வருமாறு அமைத்திருந்தார். இவர் 1988-ஆம் ஆண்டு முதல் பாக்யா எனும் வார இதழ் ஒன்றினையும் நடத்தி வந்தார்.

Krishnaswamy Bhagyaraj (7 January 1953 – 27 June 2026) was an Indian filmmaker, actor, musician and politician. He worked predominantly in Tamil cinema, while also directing and acting in films in other Indian languages. He wrote and directed more than 25 films and acted in over 75 films, and was regarded as one of the most influential writer-directors in Tamil cinema during the 1980s. He edited the Tamil weekly magazine Bhagya and authored several novels.

Read full biography ›

Bhagyaraj was born in Vellankoil, near Gobichettipalayam, in 1953. He began working in the Tamil film industry in the mid-1970s as an assistant director under G. Ramakrishnan and Bharathiraja. He began writing scripts and dialogues for films, while also appearing in smaller acting roles. Beginning in the early 1980s, Bhagyaraj started directing films and often appeared in the lead role in the films he directed. He also directed a few remakes of his films in Hindi. He emerged as one of the leading screenwriters and directors in Tamil cinema during the 1980s and early 1990s. In later years, he directed a few films, and also appeared as a supporting actor in several films.

He founded MGR Makkal Munnetra Kazhagam in 1989. He joined the All India Anna Dravida Munnetra Kazhagam later, before joining the Dravida Munnetra Kazhagam in 2005. He was active in politics in the 1990s and early 2000s.

Bhagyaraj received the Tamil Nadu State Film Award for Best Dialogue Writer for Puthiya Vaarpugal (1979), the Filmfare Award for Best Actor – Tamil for Mundhanai Mudichu (1983), and the SIIMA Lifetime Achievement Award in 2014.

Krishnaswamy Bhagyaraj was born on 7 January 1953 in Vellankoil near Gobichettipalayam in Coimbatore district (present-day Erode district). He is from a Telugu Kamma family, and his forefathers migrated from Andhra Pradesh to Tamil Nadu.

In 1981, Bhagyaraj married actress Praveena, who was his co-star in Bhama Rukmani (1980). She died due to jaundice in August 1983. On 7 February 1984, he married actress Poornima Bhagyaraj, who was his co-star in Darling, Darling, Darling (1982). The couple had a daughter Saranya Bhagyaraj and a son Shanthnu Bhagyaraj, both of whom are actors.

Bhagyaraj died from a cardiac arrest on 27 June 2026, at the age of 73 and was cremated with full state honors.

Beginning his career as an assistant to directors G. Ramakrishnan on the film Ezhai Panakkaran, which came to a halt after two days. Thereafter, he went on to work with Bharathiraja, Bhagyaraj became recognised for his scriptwriting talent. He first appeared as a junior artist playing small roles with in films such as 16 Vayathinile (1977) and later appeared similarly in Sigappu Rojakkal (1978). He was assistant director to Bharathiraja in two films – 16 Vayathinile and Kizhakke Pogum Rail. Among his early work was writing the script for Bharathiraja's films Kizhake Pogum Rail (1978) and Tik Tik Tik (1981), and writing dialogues for Sigappu Rojakkal. He made his directorial début with Suvarilladha Chiththirangal in 1979 and also his debut as the leading man in Puthiya Vaarpugal, directed by Bharathiraja. He received the Tamil Nadu State Film Award for Best Dialogue Writer in Puthiya Vaarpugal (1979). He wrote dialogues and screenplays and acted in Kanni Paruvathile (1979).

Bhagyaraj quickly established his own concern and started producing a string of distinctive films made mainly in Tamil. Bhagyaraj often cast himself in the lead roles of the films he scripted and directed, effectively carving out a niche for himself in the actor-auteur vein. His style of filmmaking is notable for its relatively elaborate, witty, and double-entendre-laced scripts and socially-themed framework. His on-screen personae are typically characterised by their ironic sense of humour and intelligent bravado.

He introduced actress Urvashi as a lead in the film Mundhanai Mudichu (1983) and Kalpana (sister of Urvashi) made her lead debut with the 1985 film Chinna Veedu, directed by Bhagyaraj, a commercially successful film. He received the Filmfare Award for Best Actor – Tamil in Mundhanai Mudichu.

His successful Tamil films written by him continued to be in demand for Hindi remakes in the 1980s and 1990s and were huge hits in Hindi – with Andha 7 Naatkal remade as Woh Saat Din and Enga Chinna Rasa remade as Beta (1992), both of which were successful.

Bhagyaraj rarely acted in films not directed or written by him, with exceptions being Anbulla Rajinikanth (1984) and Naan Sigappu Manithan (1985). He decided to direct the Hindi remake of Bharatiraja's 1984 directorial venture Oru Kaidhiyin Diary with Rajesh Khanna in the lead in 1985, but later Khanna due to his date issues had to opt out and Bhagyaraj cast Amitabh Bachchan in the Hindi remake Aakhree Raasta (1986). Bhagayraj decided to adapt a Kannada novel into a new film Enga Chinna Rasa in 1987, which became a blockbuster. In 1988, he wrote the script for Idhu Namma Aalu and decided to produce it, but chose not to direct it himself, as he wanted to act-write-direct a film on a serious issue, which was Aararo Aaariraro. He received the Best Film Award for Idhu Namma Aalu in 1990, directed by novel writer Balakumaaran, whereas the other film Aararo Aaariraro also was both critically acclaimed and successful at the box office.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

K. Bhagyaraj Movies List · திரைப்படங்கள் · 52

  1. Dark 2026 ♪ 1

    Dark

  2. Dark Giant 2026

    Dark Giant

  3. BP 180 2025

    BP 180

  4. 3.6.9 2023

    3.6.9

  5. Kathar Basha Endra Muthuramalingam 2023 ♪ 4

    Kathar Basha Endra Muthuramalingam

    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்

  6. Ponmagal Vandhal 2020 ♪ 4

    Ponmagal Vandhal

    பொன்மகள் வந்தால்

  7. Ayyanar Veethi 2017

    Ayyanar Veethi

    அய்யனார் வீதி

  8. Kirumi 2015 ♪ 6

    Kirumi

    கிருமி

  9. Mahabalipuram 2015 ♪ 5

    Mahabalipuram

    மஹாபலிபுரம்

  10. Thunai Mudhalvar 2015

    Thunai Mudhalvar

    துணை முதல்வர்

  11. 2013

    Oruvar Meethu Iruvar Sainthu

  12. Vaagai Sooda Vaa 2011 ♪ 6

    Vaagai Sooda Vaa

    வாகை சூட வா

  13. Siddhu +2 2010

    Siddhu +2

    சித்து +2

  14. 2007

    Kasu Irukkanum

    காசு இருக்கணும்

  15. Parijatham 2006 ♪ 4

    Parijatham

    பாரிஜாதம்

  16. Chokka Thangam 2003 ♪ 5

    Chokka Thangam

    சொக்கத்தங்கம்

  17. 2001

    Kabadi Kabadi

    கபடி கபடி

  18. Vaettiya Madichu Kattu 1998

    Vaettiya Madichu Kattu

    வேட்டிய மடிச்சுக்கட்டு

  19. Gnanapazham 1996

    Gnanapazham

    ஞானப்பழம்

  20. Oru Oorla Oru Rajakumari 1995

    Oru Oorla Oru Rajakumari

    ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி

  21. Thaikulame Thaikulame 1995 ♪ 4

    Thaikulame Thaikulame

    தாய்க்குலமே தாய்க்குலமே

  22. Veetla Vishesanga 1994 ♪ 6

    Veetla Vishesanga

    வீட்ல விசேஷங்க

  23. Amma Vandhachu 1992

    Amma Vandhachu

    அம்மா வந்தாச்சு

  24. Raasukutti 1992 ♪ 2

    Raasukutti

    ராசுக்குட்டி

  25. Sundara Kandam 1992

    Sundara Kandam

    சுந்தர காண்டம்

  26. Pavunnu Pavunuthan 1991

    Pavunnu Pavunuthan

    பவுனு பவுனுதான்

  27. Rudhra 1991 ♪ 3

    Rudhra

    ருத்ரா

  28. Avasara Police 100 1990

    Avasara Police 100

    அவசர போலீஸ் 100

  29. Aararo Aariraro 1989 ♪ 6

    Aararo Aariraro

    ஆராரோ ஆரிரரோ

  30. En Rathathin Rathame 1989

    En Rathathin Rathame

    ௭ன் ரத்தத்தின் ரத்தமே

  31. Ponnu Pakka Poren 1989 ♪ 5

    Ponnu Pakka Poren

    பொண்ணு பாக்க போறேன்

  32. Idhu Namma Aalu 1988 ♪ 4

    Idhu Namma Aalu

    இது நம்ம ஆளு

  33. Chinna Kuyil Paaduthu 1987 ♪ 5

    Chinna Kuyil Paaduthu

    சின்ன குயில் பாடுது

  34. Enga Chinna Rasa 1987 ♪ 6

    Enga Chinna Rasa

    எங்க சின்ன ரஸா

  35. Kanna Thorakkanum Saami 1986 ♪ 5

    Kanna Thorakkanum Saami

    கன்ன தொறக்கணும் சாமி

  36. Chinna Veedu 1985 ♪ 4

    Chinna Veedu

    சின்ன வீடு

  37. Naan Sigappu Manithan (1985 Film) 1985 ♪ 5

    Naan Sigappu Manithan (1985 Film)

    நான் சிகப்பு மனிதன் (1985 Film)

  38. Dhavanik Kanavugal 1984

    Dhavanik Kanavugal

    தாவணிக் கனவுகள்

  39. Mundhanai Mudichu 1983 ♪ 6

    Mundhanai Mudichu

    முந்தானை முடிச்சு

  40. Darling Darling Darling 1982 ♪ 3

    Darling Darling Darling

    டார்லிங் டார்லிங் டார்லிங்

  41. Poi Satchi 1982 ♪ 3

    Poi Satchi

    பொய் சாட்சி

  42. Thooral Ninnu Pochchu 1982

    Thooral Ninnu Pochchu

    தூறல் நின்னு போச்சு

  43. Andha 7 Naatkal 1981

    Andha 7 Naatkal

    அந்த 7 நாட்கள்

  44. Indru Poi Naalai Vaa 1981 ♪ 3

    Indru Poi Naalai Vaa

    இன்று போய் நாளை வா

  45. Mouna Geethangal 1981 ♪ 4

    Mouna Geethangal

    மௌன கீதங்கள்

  46. Vidiyum Varai Kaathiru 1981 ♪ 6

    Vidiyum Varai Kaathiru

    விடியும் வரை காத்திரு

  47. Bhama Rukmani 1980 ♪ 3

    Bhama Rukmani

    பாமா ருக்மணி

  48. Ilamai Kolam 1980 ♪ 4

    Ilamai Kolam

    இளமை கோலம்

  49. Oru Kai Osai 1980 ♪ 4

    Oru Kai Osai

    ஒரு கை ஓசை

  50. Kanni Paruvathile 1979 ♪ 4

    Kanni Paruvathile

    கன்னி பருவத்திலே

  51. Puthiya Vaarpugal 1979 ♪ 3

    Puthiya Vaarpugal

    புதிய வார்ப்புகள்

  52. Suvarilladha Chiththirangal 1979

    Suvarilladha Chiththirangal

    சுவர் இல்லாத சித்திரங்கள்

K. Bhagyaraj · Actor songs · 0

No song lyrics for K. Bhagyaraj as actor yet.