About Janaki
- பிறப்பு · Born
- 23 Apr 1938, Repalle
- மறைவு · Died
- 11 Jul 2026
எஸ். ஜானகி (S. Janaki, 23 ஏப்ரல் 1938 – 11 சூலை 2026) இந்தியாவின், புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடினார். நான்கு தடவை தேசிய விருது பெற்றவர். இவர் "ஜானகியம்மா" என்று மரியாதையுடன் குறிப்பிடப்படுகிறார். மேலும் இந்தியாவின் மிகச் சிறந்த, பிரபலமான பின்னணிப் பாடகியரில் ஒருவர். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், இந்தி, ஒடியா, வங்காள மொழி, உள்ளிட்ட 17 மொழிகளில் தனிப்பாடல்கள் பாடியுள்ளார். திரைப்படங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சி, வானொலி என 50,000 பாடல்களைப் பதிவு செய்துள்ளார். மராத்தி, துளு, உருது, குஜராத்தி, பஞ்சாபி, கொங்கணி, அசாமியம், சிந்தி, ஆங்கிலம், சப்பானிய, அரபு, ஜெர்மன், சிங்களம் போன்ற மொழிகளிலும் பாடினார். இருப்பினும் இவரது வாழ்க்கையில் அதிக எண்ணிக்கையிலான பாடல்கள் கன்னடத்தில் இடம்பெற்றிருந்தன. 1957-ஆம் ஆண்டில் விதியின் விளையாட்டு என்ற தமிழ்த் திரைப்படத்தில் தொடங்கி, இவரது இசை வாழ்க்கை ஆறு தலைமுறைகளைக் கண்டுள்ளது.
தென்னிந்தியாவின் "இசையரசி" என்று அழைக்கப்படும் ஜானகி, நான்கு தேசியத் திரைப்பட விருதுகளையும், 33 வெவ்வேறு மாநிலத் திரைப்பட விருதுகளையும் வென்றார். மைசூர் பல்கலைக்கழகத்திடமிருந்து, முனைவர் பட்டமும், தமிழ்நாடு அரசிடமிருந்து கலைமாமணி விருதும், கர்நாடக அரசிடமிருந்து கர்நாடக இராஜயுத்சவா விருதும் பெற்றார். 2013-ஆம் ஆண்டில், இந்திய அரசு அறிவித்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்துவிட்டார். மிகவும் தாமதமாக வந்ததென்றும் தென்னிந்தியக் கலைஞர்களுக்குத் தகுந்த அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
பல்துறை பாடகர்களில் ஒருவரான எஸ். பி. பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோருடனான இவரது கூட்டணி அதிகம் பேசப்படுகிறது. 1960, 1970, 1980களில் பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. ஜே. யேசுதாஸ், பி. ஜெயச்சந்திரன், இராஜ்குமார் ஆகியோருடன் அதிக எண்ணிக்கையில் திரைப்பாடல்கள் பாடினார். இவர் கிட்டத்தட்ட அனைத்து வகை பாடல்களிலும் பாடினார். அக்டோபர் 2016-இல் திரைப்படங்கள், மேடைக் கச்சேரிகள் ஆகியவற்றில் பாடல்களைப் பாடுவதிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும், திரைப்படத் துறையினர் அன்பிற்கிணங்க இவர் 2018-ஆம் ஆண்டில் பண்ணாடி என்ற தமிழ்த் திரைப்படத்திற்காக மீண்டும் பாட வந்தார்.
ஜானகி தெலுங்குப் பிராமணக் குடும்பத்தில் ஆந்திராவின், குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் இராமமூர்த்தி - சத்யவதி இணையருக்குப் பிறந்தார். சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார். நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் சுடூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார். 1957-ஆம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதற் பாடலாகும். அடுத்த நாளே அவருக்குத் தெலுங்குத் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. "எம்எல்ஏ" என்ற திரைப்படத்தில் நீயாசா அடியார் என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கணி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார்.
1992-ஆம் ஆண்டில் இலங்கை சென்றிருந்தபோது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடினார். மௌனப் போராட்டம் என்ற தெலுங்குத் திரைப்படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருந்தார்.
ஜானகி கணவர் இராம் பிரசாத், மகன் முரளி கிருஷ்ணாவுடன் சென்னையில் வாழ்ந்து வந்தார். முரளி கிருஷ்ணா சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
ஜானகி 1959-இல் வி. இராம்பிரசாத்தை மணந்தார். அவர் தனது இசை வாழ்க்கையை ஊக்குவித்தார். மேலும் இவரது பெரும்பாலான பாடல் பதிவுகளின் போது அவர் உடன் சென்றார். இதய நிறுத்தம் காரணமாக 1997-இல் இராம்பிரசாத் இறந்தார். இவர்களின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா ஹைதராபாத்தில் வசித்து வந்தார். முரளி கிருஷ்ணா 2026 சனவரி 22 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மனைவி உமா முரளிகிருஷ்ணா, சென்னையிலுள்ள ஒரு பரதநாட்டிய, குச்சிப்புடி, நடனக் கலைஞர் ஆவார். இவர்களுக்கு வர்சா, அப்சரா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 இந்திய மொழிகளில் சரளமாக உரையாடவும் எழுதவும் தெரிந்தவர்.
ஜானகி 2026 சூலை 11 அன்று மைசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது 88-ஆவது அகவையில் காலமானார்.
Sistla Janaki (23 April 1938 – 11 July 2026) was an Indian playback singer and occasional music composer. Fondly known as Janaki Amma (lit. Mother Janaki) and described as the 𝗡𝗶𝗴𝗵𝘁𝗶𝗻𝗴𝗮𝗹𝗲 𝗼𝗳 𝗶𝗻𝗱𝗶𝗮𝗻 𝗺𝘂𝘀𝗶𝗰 and "Nightingale of South India", Janaki is considered one of the greatest and most influential singers in the history of Indian music.She was widely regarded as most versatile singer of Indian music. She was widely acclaimed as the "Queen of Expression and Modulation".
Read full biography › Show less ‹
Janaki recorded over 48,000 songs in films, albums, television, and radio, which includes solos, duets, chorus and title tracks in over 20 Indian languages as well as a few foreign languages, with highest number of songs in Kannada. She was one of the most versatile singers in India.
Janaki began her singing career with the Tamil film Vidhiyin Vilayattu (1957) at the age of 19 and recorded songs in six different languages in the same year. Her career spanned over six decades until 2016, when she announced her retirement from singing for films and stage appearances. However, she returned in 2018, singing for the Tamil film Pannaadi. She was active in the music industry for almost 60 years.
She won four National Film Awards and 33 different state film awards. She was a recipient of an honorary doctorate from the University of Mysore, the Kalaimamani award from the Government of Tamil Nadu, and the Rajyotsava Prashasti award from the Government of Karnataka. In 2013, she refused to accept the Padma Bhushan, the third-highest civilian award of India. She felt the honor came "too late" in her career. Furthermore, she expressed disappointment over the lack of representation and due recognition for South Indian artists in the national awards list.
Janaki was born in the Pallapatla village of Madras Province, British Raj (now in Bapatla district, Andhra Pradesh, India) on 23 April 1938. Her father, Sistla Sreeramamurthy, was an Ayurvedic doctor and teacher. She spent most of her childhood in Sircilla (now in Telangana, India) where she got her first on-stage performance opportunity at the age of nine. She learnt the basics of music through a Nadaswaram vidwan, Paidiswamy. She never pursued any formal training in classical music.
She married V. Ramprasad in 1959. He encouraged her career and accompanied her during most of her recordings. He died in 1997 due to cardiac arrest.
Janaki's mother language was Telugu, but she also sang songs in roughly 20 languages in India, including Kannada, Telugu, Tamil, Malayalam, Hindi, Konkani, Odia, Tulu, Urdu, Punjabi and Bengali.
Janaki died in Mysuru, Karnataka on 11 July 2026, at the age of 88, due to age-related ailments. She was cremated with full state honour by the government of karnataka.
While in her twenties, Janaki moved to Chennai on the advice of her uncle to work with the music composer R. Sudarsanam in AVM Studios as a singer. She started her career as a playback singer in the Tamil movie Vidhiyin Vilayattu in 1957. Subsequently, she performed in the Telugu film M.L.A.. She sang film songs in 6 languages in her first year.
Janaki picked the Malayalam lullaby "Amma Poovinum" from 10 Kalpanakal as the swansong of her 60-year singing career and retired on 28 October 2017 with a concert held at Mysuru.
Janaki started her career in Telugu films in 1957 in the film M.L.A. Movies like Bava Maradallu, Pooja Phalam and Bangaru Panjaram had songs by S. Janaki which were immensely popular. She sang continuous hits throughout the 1960s and 70s, continuing this streak until about the mid-90s. Janaki won 12 Nandi awards, 10 for films and 2 for television serial songs. A few of her solos are:
"Nee Aasa Adiyaasa" and "Idenandi Idenandi Bhagyanagaramu" - M.L.A. (1957)
"Podamu Ravoi Bava" - Kutumba Gowravam (1957)
"Gaajulamma Gaajulu" - Karthavarayuni Katha (1958)
"Aakashamele Andala Raje" - Rakta Sambandham (1962)
"Venugaanammu Vinipinchene" Siri Sampadalu (1962)
Janaki sang the most songs in her career in Kannada. Her solos and duets with legends such as P B Srinivas, S. P. Balasubrahmanyam, and Dr. Rajkumar are considered evergreen hits.
She sang her first Kannada song in 1957. By the early 60s, she had started working with many prominent music composers. Throughout the 1970s and 80s, she remained the number one go-to female playback singer in Kannada films. Most of the music directors, from G. K. Venkatesh, Rajan–Nagendra to Hamsalekha, offered her most of their top compositions.
Janaki had a record number of duets with P B Srinivas, S P Balasubrahmanyam, and Dr Rajkumar. She was awarded the Rajyotsava Prashasti in 2014. Janaki was awarded an honorary doctorate from the University of Mysore for her tremendous contribution to Kannada film and music.
Some of her solos in Kannada cinema are:
"Shiva Shiva Ennada Naaligeyeke" Hemavathi (1977)
"Poojisalende Hoogala" Eradu Kanasu (1974)
"Gaaligopura Ninnashatheera" Nanda Deepa (1963)
"Karedaru Kelade" Sanaadi Appanna (1977)
"Deepavu Ninnade" Mysore Mallige (film) (1992)
"Sukhada Swapna Gaana" Mareyada Haadu (1981)
"Thangaliyalli Naanu" Janma Janmada Anubandha (1980)
"Akasha Deepavu Neenu" Pavana Ganga (1977)
"Aaseya Bhava Olavina Jeeva" Mangalya Bhagya (1976)
"Mahalaksmi Manege" Lakshmi Kataksha (1985)
"Hoovondu Beku Ballige" Pavana Ganga (1977)
"Ragavendra- Bidenu Ninna Pada" Naa Ninna Bidalare (1979)
"Kangalu Thumbiralu" Chandanada Gombe (1979)
"Olavina Gelayane" Naniruvude Ninagagi (1979)
Janaki sang her first Malayalam song in 1957. She practiced the correct accent and the nuances of the language, which made her the most sought-after singer in the industry throughout 1970s until mid 80s. She was the favorite of many popular music composers like V Dakshinamoorthi, MS Baburaj, Shyam, MB Sreenivasan, A.T.Ummer and Salil Choudhary.
She went on to sing thousands of songs from the early 1960s to the mid-80s. She received her first Kerala state film award for best singer in 1970 and went on to win the same award almost every year for the next 15 years.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Janaki Movies List · திரைப்படங்கள் · 6
Janaki · Actor songs · 0
No song lyrics for Janaki as actor yet.