Skip to content

Popular

G

Artist profile

Gautham Vasudev MenonTamil Actor – Movies List & Song Lyrics

கௌதம் மேனன்

About Gautham Vasudev Menon

பிறப்பு · Born
25 Feb 1973, Ottapalam

கௌதம் வாசுதேவ் மேனன் (Gautham Vasudev Menon, பிறப்பு: 25 பெப்ரவரி 1973) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். தனது தமிழ்ப் படங்களின் மறு ஆக்கங்களாக தெலுங்கு மற்றும் இந்திப் படங்களையும் இயக்கியுள்ளார். இவரது பெரும்பாலான திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றுள்ளன. முக்கியமாக காதல் திரைப்படங்களான மின்னலே (2001), வாரணம் ஆயிரம் (2008), விண்ணைத்தாண்டி வருவாயா (2010), மற்றும் த்ரில்லர்களான காக்க காக்க (2003), வேட்டையாடு விளையாடு (2006), மற்றும் என்னை அறிந்தால் (2015). இதில் வாரணம் ஆயிரம் திரைப்படமானது சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. கௌதம் தனது ஃபோட்டான் கதாசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பான தங்க மீன்கள் (2013) திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க ›

கௌதம் மேனன் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலத்தில் 25 பெப்ரவரி 1973 ஆம் ஆண்டு ஒரு மலையாளி தந்தைக்கும் ஒரு தமிழ்த் தாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை 2007 ஆம் ஆண்டு இறந்தார். கேரளத்தில் பிறந்தாலும் இவர் சென்னை அண்ணா நகரில் வளர்ந்தார். இவர் பள்ளிப் படிப்பை எம். சி. சி. மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். பிறகு புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரில் உள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார்.

கௌதம் பல்கலைக் கழகத்தில் படித்த சமயத்தில் தன்னுடன் படித்த சக மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்களின் முதன்மைக் கதாபாத்திரங்களை எழுதினார். அந்நேரத்தில் டெட் பொயட்ஸ் சொசைட்டி (1989) மற்றும் நாயகன் (1987) ஆகிய திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டார். ஒரு இயக்குநராகும் தன் விருப்பத்தைத் தன் பெற்றோரிடம் தெரியப்படுத்தினார். இயக்குநர் ராஜிவ் மேனனிடம் பயிற்சி பெற இவரது தாய் அறிவுறுத்தினார். மின்சார கனவு (1997) திரைப்படத்தில் ஒரு உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அத்திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்திலும் நடித்தார்.

கௌதம் 2000ஆம் ஆண்டு ஓ லாலா என்ற காதல் திரைப்படத்தை ஆரம்பித்தார். பிறகு இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மாறினர். தலைப்பானது மின்னலே என்று மாறியது. அப்பொழுது ஆரம்ப நடிகராக இருந்த மாதவன் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். திரைப்படம் உருவான விதம் பற்றி கௌதம் மேனன் கூறும் போது எடிட்டர் சுரேஷ் அர்ஸ் தவிர மற்ற திரைப்பட குழுவினர் அனைவரும் புதுமுகங்களாக இருந்ததால் கடினமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மாதவன் இத்திரைப்படத்தின் கதையை தனது வழிகாட்டி மணிரத்னத்திடம் கூறுமாறு கௌதமிடம் கூற, இது கௌதமுக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுத்தது. அலைபாயுதே திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இத்திரைப்படத்தில் நடிக்கும் முடிவானது தனது திரைவாழ்க்கையில் நேர்மறையான முடிவாக இருக்குமா என தெரிந்துகொள்ள மாதவன் இவ்வாறு செய்தார். ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தபோதும் கௌதம் மணிரத்னத்திடம் கதையைக் கூறினார். மணிரத்னம் இக்கதையால் பெரிதாக ஈர்க்கப்படவில்லை. ஆனால் இதற்காக மாதவன் "வருத்தப்பட்டதாக" தான் நினைப்பதாக கௌதம் கூறியுள்ளார். பிறகு திரைப்படத்தைத் தொடர மாதவன் ஒப்புக் கொண்டார். இத்திரைப்படத்தில் அப்பாஸ் மற்றும் அறிமுக நடிகையான ரீமா சென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ஹாரிஸ் ஜயராஜை இசையமைப்பாளராக கௌதம் அறிமுகப்படுத்தினார். 2001 ஆம் ஆண்டு வேலன்டைன் நாளில் இத்திரைப்படம் வெளியிடப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டது. தன் முன்னாள் கல்லூரி எதிரிக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் மீது காதல் வயப்படும் ஒரு இளைஞனைப் பற்றிய கதையைக் கூறியது. வெளியிடப்பட்ட பின்னர் இப்படம் வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. "ஆர்வத்தை தூண்டக்கூடிய மற்றும் சுறுசுறுப்பான" மற்றும் "தொழில்நுட்ப ரீதியாக சிறந்த" திரைப்படமாக இருப்பதாக தி இந்து செய்தித்தாள் இத்திரைப்படத்தைப் பாராட்டியது.

மின்னலே திரைப்படத்தின் வெற்றி காரணமாக அத்திரைப்படத்தை இந்தியில் மறு ஆக்கம் செய்ய இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் வாசு பக்னானி கௌதமை ஒப்பந்தம் செய்தார். ரெஹ்னா ஹே தேரே தில் மேயின் (2001) என்று பெயரிடப்பட்ட அத்திரைப்படத்தில் மாதவனுடன் தியா மிர்சா மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் இணைந்து நடித்தனர். முதலில் தயங்கிய கௌதம் "அரை மணி" நேரத்திற்குப் பிறகு இயக்க ஒப்புக் கொண்டார். ஆனால் மின்னலே திரைப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை மீண்டும் ஒப்பந்தம் செய்யும் கௌதமின் முடிவுக்குத் தயாரிப்பாளர் ஒப்புக் கொள்ளவில்லை. இந்திப் படத்திற்காக சில காட்சிகள் நீக்கப்பட்டு புதிதாக காட்சிகள் இணைக்கப்பட்டன. படமானது "விளக்கப்படுத்தப்பட்ட விதம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடியதாக இல்லை" என தரன் ஆதர்ஷ் என்ற விமர்சகர் விமர்சித்து இருந்தார். எனினும் கௌதம் "சில காட்சிகளை நம்பிக்கையுடன் கையாண்டிருப்பதாகக்" கூறினார். படம் சராசரிக்கும் குறைவான அளவே வசூல் செய்தது. இத்திரைப்படத்தின் தோல்வி கௌதமுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. தயாரிப்பாளரின் தலையீடு காரணமாக இந்தித் திரைப்படமானது மின்னலே திரைப்படத்தின் எளிமைத் தன்மையைப் பெற்றிருக்கவில்லை என கௌதம் கூறியதாகக் கூறப்பட்டது. படம் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பிறகு, தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டதன் காரணமாக இப்படம் பிரபலமடைந்தது. இளம் வயது இந்தி பேசும் பார்வையாளர்கள் மத்தியில் தனக்கெனத் தனி இரசிகர் பட்டாளத்தை இத்திரைப்படம் பெற்றுள்ளது. 2011 ஆம் ஆண்டு ரெஹ்னா ஹே தேரே தில் மேயின் திரைப்படத்தை தன் மகன் ஜாக்கி பக்னானியைக் கதாநாயகனாகக் கொண்டு மீண்டும் மறு ஆக்கம் செய்ய வாசு பக்னானி கௌதமைத் தொடர்பு கொண்டார். ஆனால் கௌதமுக்கு அதில் ஆர்வமில்லை. 2001 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தற்காலிகமாக இரு விழி உனது என்ற கதையை கௌதம் எழுதி வருவதாக கூறப்பட்டது. எனினும் ஒரு தயாரிப்பாக அது உருவாகவில்லை.

Gautham Vasudev Menon (born 25 February 1973), also known by his initials as GVM, is an Indian film director, screenwriter, film producer and actor who predominantly works in Tamil film industry. He has also directed Telugu, Hindi and Malayalam films that were mostly either simultaneously shot with or remakes of his own Tamil films. He also has acted in some Malayalam and Telugu films. He has won two National Film Awards, three Nandi Awards and one Tamil Nadu State Film Award.

Read full biography ›

Many of his films have been both critically acclaimed and commercially successful, most notably his romantic films Minnale (2001), Vaaranam Aayiram (2008), Vinnaithaandi Varuvaayaa (2010), his cop action thrillers Kaakha Kaakha (2003), Vettaiyaadu Vilaiyaadu (2006), Yennai Arindhaal (2015) and his gangster drama Vendhu Thanindhathu Kaadu (2022). His 2008 Tamil film, Vaaranam Aayiram won the National Film Award for Best Feature Film in Tamil. Menon produces films through his film production company named Photon Kathaas. His production Thanga Meenkal (2013) won the National Film Award for Best Feature Film in Tamil.

Gautham Vasudev Menon was born on 25 February 1973 in Ottapalam, Palakkad, Kerala. His father, Prabha Krishnan, is a Malayali, and his mother is a Tamilian. He grew up in Anna Nagar, Chennai.

Menon did his schooling at the Madras Christian College Higher Secondary School, Chennai. He then completed a bachelor's degree in Mechanical Engineering from the Mookambigai College of Engineering, Pudukkottai.

Menon's time at university inspired him to write the lead roles of Minnale, Vaaranam Aayiram, Vinnaithaandi Varuvaayaa, Neethaane En Ponvasantham and Enai Noki Paayum Thota who were students in the same course. During the period, he was inspired by films such as Dead Poets Society (1989) and Nayakan (1987) and expressed his desire to his parents to change his career path and become a filmmaker. His mother insisted that he become an ad filmmaker by shooting various commercials and he took an apprenticeship under filmmaker Rajiv Menon. He went on to work as an assistant director for Minsara Kanavu (1997), in which he also appeared in a cameo role.

Menon launched a Tamil romance film O Lala in 2000 with the project eventually changing producers and titles into Minnale (2001) with Madhavan, who was at the beginning of his career, being signed on to portray the lead role. About the making of the film, Menon revealed that he found it difficult as the team was new to the industry with only the editor of the film, Suresh Urs, being an experienced technician. Menon came under further pressure when Madhavan insisted that the film's story was narrated to the actor's mentor, Mani Ratnam, to identify if the film was a positive career move. Despite initial reservations, Menon did so and Ratnam was unimpressed; however, Menon has since cited that he thought that Madhavan "felt sorry" and later agreed to continue with the project. The film also featured Abbas and newcomer Reemma Sen in significant roles, whilst Menon introduced Harris Jayaraj as music composer with the film. The film was advertised as a Valentine's Day release in 2001 and told the tale of a young man who falls in love with the girl engaged to his ex-college rival. Upon release it went on to become a large success commercially and won positive reviews from critics, with claims that the film had a lot of "lot of verve and vigour" and that it was "technically excellent".

The success of the film led producer Vashu Bhagnani to sign him on to direct the Hindi language remake of the film, Rehnaa Hai Terre Dil Mein (2001), starring Madhavan alongside Dia Mirza and Saif Ali Khan. Menon was initially apprehensive but said it eventually took "half an hour" to agree, but against his intentions, the producer opted against retaining the technical crew of the original. He changed a few elements, deleted certain scenes and added some more for the version. A critic felt that "the presentation is not absorbing" though stating that Menon "handled certain sequences with aplomb"; the film subsequently became a below-average box office performer. The failure of the film left him disappointed, with Menon claiming in hindsight that the film lacked the simplicity of the original with the producer's intervention affecting proceedings. Several years after release, the film later gained popularity through screenings on television and subsequently developed a cult following amongst young Hindi-speaking audiences. In 2011, the producer of the film approached him to remake Rehnaa Hai Terre Dil Mein with the producer's son Jackky Bhagnani in the lead role, but Menon was uninterested with the offer. Later on in 2001, it was reported that he was working on a film tentatively titled Iru Vizhi Unadhu, though the project did not develop into production.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Gautham Vasudev Menon Movies List · திரைப்படங்கள் · 36

  1. Carmeni Selvam 2026 ♪ 3

    Carmeni Selvam

  2. Devil's Double Next Level 2025 ♪ 1

    Devil's Double Next Level

  3. Hit List 2024 ♪ 1

    Hit List

  4. Hitler 2024 ♪ 6

    Hitler

  5. Joshua: Imai Pol Kaakha 2024

    Joshua: Imai Pol Kaakha

  6. Viduthalai Part 2 2024 ♪ 4

    Viduthalai Part 2

    விடுதலை பாகம் 2

  7. Karumegangal Kalaigindrana 2023 ♪ 3

    Karumegangal Kalaigindrana

    கருமேகங்கள் கலைகின்றன

  8. Pathu Thala 2023 ♪ 5

    Pathu Thala

    பத்து தல

  9. Viduthalai Part 1 2023 ♪ 3

    Viduthalai Part 1

    விடுதலை பகுதி 1

  10. FIR 2022

    FIR

  11. Selfie 2022 ♪ 5

    Selfie

  12. Vendhu Thanindhathu Kaadu 2022 ♪ 4

    Vendhu Thanindhathu Kaadu

    வெந்து தணிந்தது காடு

  13. 3:33 2021

    3:33

    3:33

  14. Kutty Story 2021 ♪ 2

    Kutty Story

    குட்டி ஸ்டோரி

  15. Rudra Thandavam 2021 ♪ 1

    Rudra Thandavam

    ருத்ர தாண்டவம்

  16. Karthik Dial Seytha Yenn 2020

    Karthik Dial Seytha Yenn

  17. Paava Kadhaigal 2020 ♪ 4

    Paava Kadhaigal

    பாவ கதைகள்

  18. Putham Pudhu Kaalai 2020 ♪ 6

    Putham Pudhu Kaalai

    புத்தம் புது காலை

  19. Enai Noki Paayum Thota 2019

    Enai Noki Paayum Thota

    எனை நோக்கி பாயும் தோட்டா

  20. Puppy 2019 ♪ 5

    Puppy

    பப்பி

  21. Goli Soda 2 2018 ♪ 4

    Goli Soda 2

    கோலி சோடா 2

  22. 2018

    Maa

  23. Enai Noki Paayum Thota 2017 ♪ 6

    Enai Noki Paayum Thota

    என்னை நோக்கி பாயும் தோட்டா

  24. Achcham Yenbadhu Madamaiyada 2016 ♪ 5

    Achcham Yenbadhu Madamaiyada

    அச்சம் என்பது மடமையடா

  25. Tamilselvanum Thaniyar Anjalum 2016

    Tamilselvanum Thaniyar Anjalum

    தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்

  26. Yennai Arindhaal 2015 ♪ 7

    Yennai Arindhaal

    என்னை அறிந்தால்

  27. Thanga Meengal 2013 ♪ 4

    Thanga Meengal

    தங்க மீன்கள்

  28. Neethane En Ponvasantham 2012 ♪ 8

    Neethane En Ponvasantham

    நீ தானே என் பொன்வசந்தம்

  29. Nadunisi Naaygal 2011

    Nadunisi Naaygal

    நடுநிசி நாய்கள்

  30. Veppam 2011 ♪ 7

    Veppam

    வெப்பம்

  31. Vinnaithaandi Varuvaayaa 2010 ♪ 7

    Vinnaithaandi Varuvaayaa

    விண்ணைத்தாண்டி வருவாயா

  32. Vaaranam Aayiram 2008 ♪ 8

    Vaaranam Aayiram

    வாரணம் ஆயிரம்

  33. Pachaikili Muthucharam 2007 ♪ 4

    Pachaikili Muthucharam

    பச்சைக்கிளி முத்துச்சரம்

  34. Vettaiyaadu Vilaiyaadu 2006 ♪ 5

    Vettaiyaadu Vilaiyaadu

    வேட்டையாடு விளையாடு

  35. Kaaka Kaaka 2003 ♪ 5

    Kaaka Kaaka

    காக்க காக்க

  36. Minnale 2001 ♪ 13

    Minnale

    மின்னலே

Gautham Vasudev Menon · Actor songs · 0

No song lyrics for Gautham Vasudev Menon as actor yet.