Skip to content

Popular

C

Artist profile

CheranTamil Actor – Movies List & Song Lyrics

சேரன்

About Cheran

பிறப்பு · Born
12 Dec 1970, Madurai

சேரன் (Cheran, பிறப்பு: திசம்பர் 12, 1965) என்பவர் தமிழ்நாட்டை திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவர் இயக்கிய வெற்றிக் கொடி கட்டு (2000), ஆட்டோகிராப் (2004) மற்றும் தவமாய் தவமிருந்து (2005) போன்ற திரைப்படங்கள் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ›

இவர் சொல்ல மறந்த கதை (2000), தவமாய் தவமிருந்து (2005), பொக்கிசம் (2009), முரண் (2011) போன்ற பல திரைப்பட ங்களிலும் கதாநாகனாக நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.

சேரன் மதுரை மாவட்டம், மேலூர், கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் திசம்பர் 12, 1965 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை பாண்டியன் வெள்ளலூர் உள்ள திரையரங்கத்தில் படம் ஓட்டுநராக பணி புரிந்தார். தாயார் கமலா தன் கிராமத்திலே தொடக்க பள்ளி ஆசிரியை ஆக வேலை பார்த்தார்.

இவருடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சிறிய வயதில் நாடகங்களில் நடித்தும் இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில், சூன் 19, 2011 அன்று நடந்த தேர்தலில், போட்டியின்றித் தேர்வுச் செய்யப்பட்ட இரு துணைத்தலைவர்களில் சேரனும் ஒருவர் ஆவார்.

திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடர சென்னை வந்தார். ஆரம்பத்தில் அவர் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர் என்ற திரைப்படத்தில் முதன் முதலாய் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை அவருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் கமல்ஹாசனுடன் இணைந்து மகாநதி படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

உதவி இயக்குநராக இருந்த அவர் பார்த்திபன் மற்றும் மீனா நடித்த பாரதி கண்ணம்மா என்னும் திரைப்படத்தை இயக்கினார். இது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கினாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து அதைத் தொடர்ந்து பொற்காலம் (1999), வெற்றிக் கொடி கட்டு (2000), பாண்டவர் பூமி (2001) போன்ற சமூக அவலங்களை சித்தரித்தே திரைப்படம் இயக்கினார். இவருடைய படங்கள் யாவும் சமூக மாற்றத்தையும், சாதாரண தமிழ் நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. அதைத் தொடர்ந்து அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006), ஆடும் கூத்து (2007), முரண் (2011) போன்ற திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு இயக்குநர் தங்கர் பச்சான் என்பவர் இயக்கிய சொல்ல மறந்த கதை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்புத்திறன் பரவலாக பேசப்பட்டு பாராட்டும் பெற்றார். பின்னர் பொக்கிசம் என்ற படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது. நடிகர் விக்ரம் நடிக்க ஆட்டோகிராப் படம் தயாரானது. அழைப்புக் கடிதம் பிரச்சனையால் அதுவும் கைவிடப்பட்டு, பின்னர்

அதில் இவரே கதாநாயகனாக நடித்து மற்றும் இயக்கவும் செய்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு 2004 இல் ஆரம்பித்த பொக்கிசம் இவர் நடிப்பில் 2009 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம் (2008), ராமன் தேடிய சீதை (2008), யுத்தம் செய் (2011), திருமணம் (2019) போன்ற பல திரைப்படங்களில் நடிகராக நடித்தார்.

ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய சேரன் "இலங்கைத் தமிழர்களுக்காக இங்கே, நாங்கள் எல்லாம், திரையுலகமே குரல் கொடுத்துள்ளோம். .. எங்களுடைய எல்லாவற்றையும் இழந்துவிட்டுப் போராடியுள்ளோம்... ஏன் இதையெல்லாம் பண்ணினோம் என்று அருவருப்பாகவுள்ளது..." என்று முறையற்ற டிவிடி மற்றும் இணையப் பதிவேற்றம் செய்பவர்களாக இலங்கைத் தமிழர்களைக் குறிப்பிட்டது சர்ச்சையை உருவாக்கியது. பின்னர், தான் குறிப்பிட்டது குறிப்பிட்ட சிலரைத்தான் ஒட்டுமொத்த இலங்கைத்தமிழர்களையும் அல்ல என சேரனால் மறுப்பு வெளியிடப்பட்டது. ஆயினும், இலங்கைத் தமிழர்கள் சார்பில் சேரன் போராட்டத்தையும் முறையற்ற டிவிடி விடயத்தையும் தொடர்புபடுத்தியிருக்கக் கூடாது என்றும், வியாபாரத்தையும் போராட்டத்தையும் சேர்க்க வேண்டாம் என்றும், அல்லது இலங்கைத் தமிழர்களுக்காக என்பதில் சில அல்லது குறிப்பிட்ட இலங்கைத் தமிழர்களுக்காக என தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் பதிலளிக்கப்பட்டது.

Cheran (born 12 December 1970) is an Indian film director, producer, actor and lyricist known for his works in Tamil cinema. He is a four time National Film Award winner for Vetri Kodi Kattu (2000), Autograph (2004),Aadum Koothu and Thavamai Thavamirundhu (2005). He has also won five Tamil Nadu State Film Awards and six South Filmfare Awards.

Read full biography ›

Cheran initially made breakthrough as a director by making village-based drama films focusing on human relationships, and achieved critical acclaim for his work in Bharathi Kannamma (1997) and Porkkaalam (1997). He later moved on to work on themes exploring how globalisation affects the Indian middle class, and told the story of scam job offers in Vetri Kodi Kattu (2000) and village-to-city emigration in Pandavar Bhoomi (2001). His most renowned film till date, Autograph (2004), is a semi-autobiographical tale of a man at four stage of his life. He later also experienced success with the family drama film Thavamai Thavamirundhu (2005) and as an actor in films such as Pirivom Santhippom (2008) and Yuddham Sei (2011).

Cheran was born in Pazhaiyurpatty village near Madurai. His father Pandian was a film projector operator in Vellalur's touring theatre. His mother Kamala was a primary school teacher, and he has two sisters.

He came to Chennai to pursue a career in films, and was keen to become an actor. Initially, he started career as a production manager in some films. In the film Puriyaadha Pudhir (1990), he worked as an assistant director to K. S. Ravikumar, and was later promoted to an associate director from Cheran Pandiyan (1991) to Nattamai (1994).

Cheran made his directorial debut through Bharathi Kannamma (1997), a village drama narrating the relationship between the daughter of a rich family and their retainer, starring Parthiban and Meena. During its release, the film ran into trouble with Thevar community who almost imposed a ban of the film due to its content. However the film won good reviews and performed well at the box office. In spite of controversies, the film became successful at box-office. His second film, Porkkaalam (1997) was in the same genre, and also performed well commercially as well as winning favourable reviews from critics. The film, which explored the life of a hard-working potter and his poor family, earned Cheran an award for best director from the Tamil Nadu State.

Unlike his first two films, his third film did not fare well at the box office despite winning positive reviews. Desiya Geetham (1998) told the story of a Chief Minister being kidnapped and taken to a remote village, and it subsequently met with a controversial response from politicians. Despite Cheran's intervention and explanation of the script to senior political figures, the film was quickly removed from cinema halls, much to the director's dismay. However, the film won good reviews and a critic noted it was "a rare, good movie with a message" and added that Cheran "deserves credit for making a movie that tries to tell something and keeping away from the usual, commercial add-ons". Following the film's failure, Cheran announced several projects before opting not to continue with them. He initially considered other films with Murali, one co-starring Shammi Kapoor titled Paraseega Roja, and another co-starring Meena titled Maaya Maan but the films did not progress. Cheran then moved on an urban love story starring Prashanth, Shamitha and himself. The film was initially titled Inniya Kaadalargale and then renamed as Vinnodum Mugilodum, but the film was also later dropped. Another light-hearted film titled Aagaya Kottai was planned with Arunkumar, Suriya and Raju Sundaram, but it did not start production.

He later worked again with Parthiban and Murali for the social comedy drama, Vetri Kodi Kattu (2000), which focused on scams committed by agents who promised lavish jobs and salaries abroad, and in the process swindling the money of innocent people. The film won critical acclaim upon release, and Cheran won a National Film Award for his work in the film. Cheran then made Pandavar Bhoomi (2001) with actors Arunkumar and his father Vijayakumar alongside Shamitha and Rajkiran, which explored themes of wholesale emigration of villagers to the city and the loss of good, solid agricultural lands, culture and solidarity. The film performed well at the box office and garnered mixed reviews from critics. A reviewer from Sify.com stated the film was "typical overdose of Cheran melodrama masala". Cheran then turned actor in director Thangar Bachan's romantic drama film Solla Marandha Kadhai (2002). The film garnered mixed review but performed well at the box office.

Cheran first began work on Autograph in October 2000 with Prabhu Deva and then Vikram cast, though the actors later opted out as a result of schedule clashes. In early 2002, Cheran announced that he was going to instead make a film titled Pokkisham and Kanika would star alongside him. However he failed to find a financier and moved back to making Autograph. As producers were unwilling to finance the film, Cheran opted to produce and star in the film himself and the film consequently took over a year to make. Autograph told the story of a man named Senthil, presented in four stages of his life – at school, college, work and during his marriage, and Cheran called the film "semi-autobiographical". The film starred him alongside Sneha, Gopika, Mallika and Kaniha, and had a popular soundtrack composed by Bharadwaj. Four different cinematographers worked on the film; Ravi Varman had shot the school episode in Senthil's early life with a 35 mm lens, Vijay Milton shot the Kerala scenes, Dwaraknath shot the Chennai episode with a steady cam and Shanky Mahendran shot the "'live' part" of the film when the camera uses the point of view of Senthil's character.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Cheran Movies List · திரைப்படங்கள் · 24

  1. Tamil Kudimagan 2023

    Tamil Kudimagan

  2. Anandham Vilayadum Veedu 2021 ♪ 4

    Anandham Vilayadum Veedu

    ஆனந்தம் விளையாடும் வீடு

  3. Rajavukku Check 2020

    Rajavukku Check

    ராஜாவுக்கு செக்

  4. Thirumanam 2019

    Thirumanam

    திருமணம்

  5. JK Enum Nanbanin Vaazhkai 2015 ♪ 8

    JK Enum Nanbanin Vaazhkai

    ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை

  6. Chennaiyil Oru Naal 2013

    Chennaiyil Oru Naal

    சென்னையில் ஒரு நாள்

  7. Moondru Per Moondru Kadhal 2013 ♪ 6

    Moondru Per Moondru Kadhal

    மூன்று பேர் மூன்று காதல்

  8. Muran 2011

    Muran

    முரண்

  9. Yuddham Sei 2011

    Yuddham Sei

    யுத்தம் செய்

  10. Pokkisham 2009 ♪ 11

    Pokkisham

    பொக்கிஷம்

  11. Pirivom Santhippom 2008 ♪ 6

    Pirivom Santhippom

    பிரிவோம் சந்திப்போம்

  12. Raman Thediya Seethai 2008 ♪ 6

    Raman Thediya Seethai

    ராமன் தேடிய சீதை

  13. Maya Kannadi 2007

    Maya Kannadi

    மாயக் கண்ணாடி

  14. 2006

    Aadum Koothu

    ஆடும் கூத்து

  15. Azhagai Irukkirai Bayamai Irukkirathu 2006 ♪ 5

    Azhagai Irukkirai Bayamai Irukkirathu

    அழகை இருக்கிறாய் பயமாய் இருக்கிறது

  16. Thalaimagan 2006

    Thalaimagan

    தலைமகன்

  17. Thavamai Thavamirundu 2005

    Thavamai Thavamirundu

    தவமாய் தவமிருந்து

  18. Autograph 2004 ♪ 6

    Autograph

    ஆட்டோகிராப்

  19. Solla Marandha Kadhai 2002 ♪ 7

    Solla Marandha Kadhai

    சொல்ல மறந்த கதை

  20. Pandavar Bhoomi 2001 ♪ 8

    Pandavar Bhoomi

    பாண்டவர் பூமி

  21. Vetri Kodi Kattu 2000 ♪ 1

    Vetri Kodi Kattu

    வெற்றி  கொடி  கட்டு

  22. Desiya Geetham 1998 ♪ 8

    Desiya Geetham

    தேசிய கீதம்

  23. Bharathi Kannamma 1997 ♪ 11

    Bharathi Kannamma

    பாரதி கண்ணம்மா

  24. Porkkaalam 1997 ♪ 5

    Porkkaalam

    பொற்காலம்

Cheran · Actor songs · 0

No song lyrics for Cheran as actor yet.