Skip to content

Popular

Anushka Shetty

Artist profile

Anushka ShettyTamil Actor – Movies List & Song Lyrics

அனுசுக்கா செட்டி

About Anushka Shetty

பிறப்பு · Born
7 Nov 1982, Mangaluru

அனுஷ்கா ஷெட்டி ( ஸ்வீட்டி ஷெட்டி, பிறப்பு: நவம்பர் 7, 1980 ) இந்திய திரைப்பட நடிகையாவார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டும் நடித்துவருகிறார். இவர் நடித்த சில திரைப்படங்கள் மலையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க ›

2005-ல் இவர் நடித்த முதல் திரைப்படம் - நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்குத் திரைப்படமாகும். 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். கடந்த பத்து வருடங்களில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

துவக்கத்தில் ஒரு சராசரி கவர்ச்சி நாயகியாக அறியப்பட்ட இவர், அருந்ததி திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத் திறனை நன்கு வெளிப்படுத்தினார். இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது.

அதன் பின், இவரது திரை வாழ்க்கை முற்றிலும் மாறியது. மாறுபட்ட கதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து, அதற்காக முழு சிரமத்தை எடுத்து நடித்து வருகிறார்.

அனுஷ்கா ஷெட்டி 1980-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் பிறந்தார்.

இவரின் தந்தை ஏ.என்.விட்டல் ஷெட்டி, ஒரு பொறியாளர். தாய் ஃபிரபுல்லா, இல்லத்தரசி. இவருக்கு இரண்டு அண்ணன்மார்கள் இருக்கின்றனர். மூத்தவர் சாய் ரமேஷ் ஷெட்டி ஒரு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுனர். இளையவர் குணா ரஞ்சன் ஷெட்டி.

திராவிட கிளை மொழியான துளு-ஐ தாய் மொழியாகக் கொண்டவர்கள். தற்போது பெங்களூரில் வசிக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமான ஓர் உணவகம் பெங்களூர் நகரில் உள்ளது.

அனுஷ்கா பெங்களூரில் உள்ள மெளண்ட் கார்மேல் பள்ளியில் கல்வி பயின்றார். பின் கணினி பாடத்தில் இளங்கலை பட்டமும் பெற்றார்.

தான் கல்வி பயின்ற பள்ளியிலேயே ஓராண்டு பூகோள ஆசிரியையாகவும் பணி செய்துள்ளார்.

தனது தந்தையின் வற்புருத்தலின் பேரில், விடுமுறைக்கால யோகா பயிற்சி வகுப்புகளில் கலந்துக்கொண்டவர், யோக முறைகளினால் கவரப்பட்டு முழு ஈடுபாட்டுடன் பயிற்சியை எடுத்துக்கொண்டார்.

பின்னர், மும்பையில் யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் யோக கலையை முழுமையாக பயின்று, தீட்சை பெற்று யோகாவை பயிற்றுவிக்கும் பயிற்றுநர் ஆனார்.

இவரது யோகா குரு பரத் தாகூரின் மனைவி புகழ்பெற்ற நடிகை பூமிகா என்பதால், அவர்களின் திரையுலக நண்பர் ஈஸ்வர் நிவாஸ் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அனுஷ்காவிற்கு தேடிவந்தது. ஆரம்பத்தில் நடிப்பதில் விருப்பமில்லாத அனுஷ்கா வந்த வாய்ப்புகளை தட்டிக்கழித்தார்.

பின் தனது குரு பரத் தாகூரின் அறிவுரையின் பேரில், தெலுங்குத் திரைப்பட இயக்குநர் பூரி ஜகன்நாத்தை மும்பையில் சந்தித்து அவர் கேட்டுக்கொண்டதற்காக ஹைதராபாத்திற்குச் சென்று புகைப்பட ஒத்திகையில் கலந்துக்கொண்டார்.

அதில் தேர்வு செய்யப்பட்ட அனுஷ்கா, 2005-ம் ஆண்டு தனது முதல் திரைப்படமாக பூரி ஜகன்நாத் இயக்கத்தில் அக்கினேனி நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்தார். இத்திரைப்படம் 2005 ஜூலை மாதத்தில் வெளியானது. இத்திரைப்படம் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை என்றாலும் ஒரு நல்ல துவக்கத்தை அனுஷ்காவிற்கு கொடுத்தது.

அதே ஆண்டில் அனுஷ்கா நடித்த இரண்டாவது திரைப்படம் மகாநந்தி வெளியானது. இந்த திரைப்படமும் சராசரி திரைப்படமாகவே அமைந்தது. இருப்பினும் அனுஷ்காவிற்கு நடிப்பதில் ஒரு படி முன்னேற்றம் கிடைத்தது.

2006-ம் ஆண்டில் அனுஷ்கா நடித்த நான்கு திரைப்படங்கள் வெளியானது.

முதலாவது, தொடர் வெற்றிப்படங்களை கொடுக்கும் இயக்குநர், திரு.ராஜ மெளலியின் இயக்கத்தில், ரவி தேஜாவுடன் இணைந்து நடித்த விக்ரமார்க்கடு. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் அனுஷ்கா ஒரு கவர்ச்சி நாயகியாகவே சித்தரிக்கப்பட்டார். நடிப்புத்திறனை வெளிக்காட்டும் அளவிற்கு அழுத்தமான கதாபாத்திரமாக இத்திரைப்படம் அமையவில்லை.

இரண்டாவதாக அஸ்திரம் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படமும் சராசரி திரைப்படமாகவே அமைந்தது. மூன்றாவதாக, சி.சுந்தர் இயக்கத்தில், மாதவனுடன் இணைந்து நடித்த ரெண்டு எனும் தமிழ்த் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் அனுஷ்கா முழுவதும் கவர்ச்சி நாயகியாகவே சித்தரிக்கப்பட்டார். குறிப்பாக பாடல் காட்சிகள், ( மொபைலா, யாரோ எவரோ ) அனுஷ்காவின் உடல் கவர்ச்சியை வெளிக்காட்டவே எடுக்கப்பட்டதாக இருந்தது. எனினும், இத்திரைப்படம் இளைஞர்களை கவர்ந்த அளவிற்கு மற்றவர்களை கவரவில்லை. நான்காவதாக, ஸ்டாலின் திரைப்படத்தில் கெளரவ வேடம்.

2007-ம் ஆண்டில் அனுஷ்காவின் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியானது. முதலாவது லக்ஷ்யம், இரண்டாவது ராகவா லாரன்ஸின் டான் திரைப்படம். லக்ஷ்யம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றித்திரைப்படமானது.

டான் மசாலா திரைப்படமாகவே அமைந்தது. இந்த இரு படங்களிலும் அனுஷ்கா கவர்ச்சி நாயகியாகவே சித்தரிக்கப்பட்டார்.

2008-ம் ஆண்டில் அனுஷ்கா நடித்த ஆறு திரைப்படங்கள் வெளியானது.

முதலாவது, ஒக்கமகடு. நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் நடித்தது. இரண்டாவது, ஜகபதி பாபுவுடன் இணைந்து நடித்த ஸ்வாகதம். மூன்றாவது ரவி தேஜாவுடன் இணைந்து நடித்த பாலதூர். நான்காவது கோபி சாந்துடன் இணைந்து நடித்த செளரியம். ஐந்தாவது சிந்தகாயல்யா. ஆறாவது, கெளரவ தோற்றத்தில் கிங் திரைப்படம். இந்த ஆறு திரைப்படங்களில் செளரியம் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொடுத்தது. மற்ற திரைப்படங்கள் சராசரியாகவே இருந்தது. இந்த திரைப்படங்கள் எதிலும் அழுத்தமான கதாபாத்திரங்கள் இல்லாமல் சராசரி நாயகியாகவே அனுஷ்கா வந்துச்சென்றார்.

2009-ம் ஆண்டு அனுஷ்கா நடித்த மூன்று திரைப்படங்கள் வெளியானது.

முதலாவது, மூன்று ஆண்டு தயாரிப்பில் எடுக்கப்பட்ட அருந்ததி திரைப்படம்.( தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது ).

இந்த திரைப்படத்தில் அனுஷ்கா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இரு வேடங்களும் அழுத்தமான கதாபாத்திரங்கள். அவருடைய முழு நடிப்புத்திறனையும் வெளிக்காட்டும்படியாக அமைந்தன. குறிப்பாக முரசு நடன பாடல் காட்சி. ஒரு மாதகாலம் படப்பிடிப்பு நடத்தி எடுக்கப்பட்டது. இந்த பாடல் காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மேலும், இத்திரைப்படத்தின் கதையாக்கம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களையும் மிகவும் கவர்ந்திருந்ததால் பட்டிதொட்டியெங்கும் சிறப்பான ஒரு வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபீசிலும் மிகப்பெரிய வசூல் செய்தது.

சுமார் 17 கோடியில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் 73 கோடிகளை வசூலித்தது. இந்தத் திரைப்படம் வெளியான பின் அனுஷ்காவின் பெயர் மாறி அருந்ததி என்றே அழைக்கப்பட்டார். தெலுங்குத் திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தை இத்திரைப்படம் பெற்றதுடன் அனுஷ்காவிற்கு நந்தி விருதையும், தமிழகத்தில் கலைமாமணி விருதையும் பெற்றுத்தந்தது. அனுஷ்காவின் திரை வாழ்வில் முதல் மைல் கல்லாக அமைந்த திரைப்படம்.

Sweety Shetty (born 7 November 1981), known professionally as Anushka Shetty, is an Indian actress known for her works in Tamil and Telugu films. With a career spanning over two decades as a lead actress in a variety of roles, Shetty is popularly referred to as "Queen of South Indian cinema" in the media. One of the highest-paid actresses in India, she is the recipient of three Filmfare Awards South, two Nandi Awards, two SIIMA Awards and one Tamil Nadu State Film Award. Shetty was honoured with Kalaimamani in 2010 by the Government of Tamil Nadu.

Read full biography ›

She made her acting debut with the 2005 Telugu film Super, which garnered her a Filmfare Best Supporting Actress – Telugu nomination. The following year, she starred in S. S. Rajamouli's blockbuster hit Vikramarkudu. Her further releases Lakshyam (2007), Souryam (2008), and Chintakayala Ravi (2008) were also box office successes. In 2009, Shetty played dual roles in the Telugu dark fantasy film Arundhati, which led her to her first Filmfare Award for Best Actress – Telugu, and Nandi Award. The following year, Shetty's portrayal of a prostitute in the acclaimed drama Vedam won her a second consecutive Best Actress Award from Filmfare.

In the 2010s, Shetty also starred in Tamil cinema in the action films such as Vettaikaaran (2009), Singam (2010), Singam II (2013), and Yennai Arindhaal (2015), all of which were major commercial successes. She continued to draw praise from critics with her leading performances in the dramas Vaanam (2011), Deiva Thirumagal (2011) and Size Zero (2015). She portrayed the titular queen in the 2015 epic historical fiction Rudhramadevi, which won her the third Filmfare Award for Best Actress – Telugu. Shetty's portrayal of Princess Devasena in the Baahubali series (2015–17) received widespread acclaim.

Shetty debuted in Malayalam with Kathanar – The Wild Sorcerer which marks her 50th film, is expected to release on 2026 second half.

Shetty was born as Sweety Shetty on 7 November 1981 in Mangalore, Karnataka. She is an ethnic Tuluva hailing from a Tulu-speaking Bunt family from Bellipady village in Puttur taluk of Dakshina Kannada district. Her parents are Prafulla and A. N. Vittal Shetty and she has two elder brothers, Gunaranjan Shetty and Sai Ramesh Shetty. Shetty received her Bachelor of Computer Applications from Mount Carmel College in Bangalore. She was also a yoga instructor, trained under Bharat Thakur.

While filming her debut film Super, the director Puri Jagannadh and producer Nagarjuna were keen for Shetty to have a screen name as they felt her real name Sweety may not be appealing to the audience. While mulling over different names, they came across Anushka Manchanda who was singing one of the songs in the film. They liked her first name and decided to adopt Anushka as the screen name for Shetty's film career.

Shetty made her acting debut in 2005 with Puri Jagannadh's Super, where she featured alongside Nagarjuna and Ayesha Takia. Sify stated, "The sexy girls Ayesha and Anushka show off their bodies." For her performance, she earned her first nomination for the Filmfare Award for Best Supporting Actress – Telugu. The same year, she acted in another film Mahanandi, opposite Srihari and Sumanth. IndiaGlitz said, "Anushka looks comely ---and that is what she seems to be in for." but added, "The script has been stitched and the seams look frayed." Sify stated that it "starts promisingly with a racy first half but goes awry and the tempo slackens post interval." and added, "Anushka looks ravishing thanks to Vasu's camera which is a major plus for the film."

In 2006, she had four releases, the first being S. S. Rajamouli's Vikramarkudu, where she was paired with Ravi Teja. Kishore of Nowrunning.com said "The high points of the movie are the flawless acting of Ravi Teja and the lusciousness of Anushka. Anushka has all the assets to that a woman ought to have." and Sify said that Anushka "is definitely a highlight." It was a commercial success. She next starred in the film Astram, a remake of the 1999 Hindi film Sarfarosh, following which she debuted in the Tamil film industry, acting in the Sundar C-directed action flick Rendu, sharing screen space with R. Madhavan. Later that year, she made a special appearance alongside Mega star Chiranjeevi in A. R. Murugadoss' directorial debut in Telugu, Stalin.

Her first release in 2007 was Lakshya which was a success in box office, after which she starred in Raghava Lawrence's Don opposite Nagarjuna again. The former, in particular, succeeded at the box office. In 2008 she had appeared in six films. Okka Magaadu was the first release, in which she played one of three female leads. Nandamuri Balakrishna was the actor opposite her in Okka Magaadu. Her next releases Swagatam alongside Jagapathi Babu and Bhumika Chawla and Baladoor opposite Ravi Teja garnered poor reviews and box office returns. She next appeared in the film Souryam with Gopichand which became a box office hit. Her last release that year was Chintakayala Ravi opposite Venkatesh.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Anushka Shetty Movies List · திரைப்படங்கள் · 14

  1. Baahubali 2 2017 ♪ 5

    Baahubali 2

    பாகுபலி 2

  2. Si3 2017

    Si3

    சி3

  3. Baahubali 2015 ♪ 7

    Baahubali

    பாகுபலி

  4. Inji Idupazhagi 2015 ♪ 6

    Inji Idupazhagi

    இஞ்சி இடுப்பழகி

  5. Yennai Arindhaal 2015 ♪ 7

    Yennai Arindhaal

    என்னை அறிந்தால்

  6. Alex Pandian 2013

    Alex Pandian

    அலெக்ஸ் பாண்டியன்

  7. Irandaam Ulagam 2013 ♪ 10

    Irandaam Ulagam

    இரண்டாம் உலகம்

  8. Singam II 2013 ♪ 6

    Singam II

    சிங்கம் 2

  9. Thaandavam 2012 ♪ 7

    Thaandavam

    தாண்டவம்

  10. Deiva Thirumagal 2011 ♪ 4

    Deiva Thirumagal

    தெய்வத்திருமகள்

  11. Vaanam 2011 ♪ 6

    Vaanam

    வானம்

  12. Singam 2010 ♪ 6

    Singam

    சிங்கம்

  13. Vettaikaaran 2009 ♪ 6

    Vettaikaaran

    வேட்டைக்காரன்

  14. Rendu 2006 ♪ 6

    Rendu

    ரெண்டு

Anushka Shetty · Actor songs · 0

No song lyrics for Anushka Shetty as actor yet.