இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(17-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(17-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(17-01-2023)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு – தை 3 

1,#நாள்:செவ்வாய்கிழமை (17.01.2023)

2,#நட்சத்திரம்: விசாகம் 02:36 PM வரை பிறகு அனுஷம்

3,#திதி : 01:25 PM வரை தசமி பின்னர் ஏகாதசி

4,#யோகம் : மரண - சித்த யோகம்

5,#கரணம் : பத்திரை மதியம் 01:15 வரை பின்பு பவம் 

நல்லநேரம் : காலை 7.30 - 8.30 / மாலை 4.30 - 5.30

#செவ்வாய்க்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
(காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை

சுபகாரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்

#இன்று:கரிநாள்
உழவர் திருநாள்
அரசு விடுமுறை

நல்ல நேரம்
07:30 - 08:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
07:30 - 08:30 மா / PM

இராகு காலம்
03.00 - 04.30
எமகண்டம்
09.00 - 10.30
குளிகை
12.00 - 01.30

#சூலம்:வடக்கு
பரிகாரம்-பால்

#சந்திராஷ்டமம்
அஸ்வினி+பரணி

#நாள்:கீழ் நோக்கு நாள்

#லக்னம்:மகர லக்னம்
இருப்பு நாழிகை 04 வினாடி 53

சூரிய உதயம்
06:34 காலை / 
சூரிய அஸ்தமனம்
06:24 மாலை /

#தோற்றம்

முன்னாள் முதல்வர் அமரர் திரு எம்.ஜி.ஆர் அவர்களின் 106'வது பிறந்த தினம் 

பெஞ்சமின் பிராங்கிளின் 
பிறந்த தினம்

#மறைவு

மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு அவர்களின் நினைவு தினம் 

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். புது திட்டங்கள் நிறைவேறும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கூடுதல் கவனம் தேவை

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, குடும்ப எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். மனதில் மாறுபட்ட யோசனைகள் உதிக்கும். பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். புதியவர்களின் நட்பால் உற்சாகம் ஏற்படும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க பழகவும், தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
ஓய்வெடுப்பது நலம் 

கடகம்

கடக ராசி நேயர்களே, புதிய முயற்சிக்கு சாதகமான முடிவு வரும். கோப தாபங்களை குறைத்து கொள்ளவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும் கோயில் தலங்களுக்கு சென்று வருவீர்கள் 

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. பழைய இனிமையான நினைவுகள் ஞாபகத்திற்கு வரும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, குடும்ப ரகசியங்களைக் கவனமாக கையாளவும். காரிய அனுகூலம் உண்டாகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திட்டமிட்ட செயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரம் சிறக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசி நேயர்களே, மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, மற்றவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். பயணங்களால் நன்மை உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் உங்கள் புகழ் ஓங்கும்.

மகரம்

மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பிரியமானவர்கள் வழியில் மன வருத்தம் வந்து நீங்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கோயில் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவீர்கள் 

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தினரின் அரவணைப்பு கிட்டும். வேண்டியவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுக்கவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். ஓய்வில் இருப்பீர்கள் 

மீனம்

மீன ராசி அன்பர்களே, குடும்ப விருப்பங்களை நிறைவேற்ற முடியும். எதையும் சாதிக்கும் துணிச்சல் உண்டாகும். சொந்த விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம்.
கோயில் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள்