இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-சனிக்கிழமை(14-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-சனிக்கிழமை(14-01-2023)

 0  5
இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-சனிக்கிழமை(14-01-2023)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு – மார்கழி 30 - 

1,*#நாள்*:சனிக்கிழமை (14.1.2023)

2,*#நட்சத்திரம்*: அஸ்தம் 03:14 PM வரை பிறகு சித்திரை

3,*#திதி* : 04:23 PM வரை சப்தமி பின்னர் அஷ்டமி

4,*#யோகம்* : மரண யோகம்

5,*#கரணம்*: பவம் மாலை 03:10 வரை பின்பு பாலவம்

நல்லநேரம் : காலை 7.30 - 8.30 / மாலை 4.30 - 5.30

#சனிக்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
(காலை 7 முதல் 7 1/2, 10 1/2 முதல் 12 வரை, பகல் 12 முதல் 1 வரை, 5 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 1/2 வரை, 9 முதல் 10 வரை)

சுபகாரியங்கள் : ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

#இன்று: போகிப் பண்டிகை

நல்ல நேரம்
07:30 - 08:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
09:30 - 10:30 மா / PM

இராகு காலம்
09.00 - 10.30
எமகண்டம்
01.30 - 03.00
குளிகை
06.00 - 07.30

#சூலம்:கிழக்கு
பரிகாரம்-தயிர்

#சந்திராஷ்டமம்
பூரட்டாதி+உத்திரட்டாதி

சம நோக்கு நாள்

#லக்னம்:தனுர் லக்னம் இருப்பு நாழிகை 00 வினாடி 11

சூரிய உதயம்
06:34 காலை / 
சூரிய அஸ்தமனம்
06:22 மாலை /

#தோற்றம்

இந்திய கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் பிறந்த தினம்

விடுதலை போராட்ட வீரர் 
கே.முத்தையா பிறந்த தினம்

விடுதலை போராட்ட வீரர் 
எல்.கே.துளசிராம் பிறந்த தினம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் தங்கபல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி

திருவல்லிக்கேணி  ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஸ்ரீவரதராஜர் மூலவருக்கு திருமஞ்சன ஸேவை 

#இன்றைய_ராசிபலன்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, உற்றார், உறவினர்கள் மூலம் ஆகாயம் உண்டு. மனக்கவலை அடியோடு நீங்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அடிக்கடி டென்ஷன் ஆகாமல் இருக்க பழகிக்கொள்ளவும். வேண்டியவர்களிடம் விட்டு கொடுத்து போகவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தின் மேல் அதிக கவனம் தேவை. பண பற்றாக்குறை பிரச்சனை நீடிக்கும். நண்பர்கள் சிலர் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடகம் 

கடக ராசி நேயர்களே, குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். தடைப்பட்ட பணம் கைக்கு வரும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். பெற்றோர்கள் ஆலோசனை உதவியாக இருக்கும். தொழில், வியபாரம் செழிப்படையும்

துலாம்

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் சாதகமான சூழல் நிலவும். வெளி வட்டார பழக்கங்கள் விரிவடையும். பயணங்களால் அலைச்சல் இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். பொருளாதார நிலை உயரும். உணவில் கவனமும், சீரான ஓய்வும் ஆரோக்கியம் தரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மகரம்

மகர ராசி நேயர்களே, ஆன்மீக எண்ணம் மேலோங்கும். புதிய சிந்தனைகள் மனதில் உதிக்கும். உதவிக் கேட்டு நண்பர்கல் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவர். தொழில், வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, சுற்றி இருப்பவர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிரியமானவர்கள் ஆதரவாக இருப்பர். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு நீங்கும். உத்யோகத்த்தில் பாராட்டு கிடைக்கும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்
புதிய முயற்ச்சிகள் தவிற்க்கவும் 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow