இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(13-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(13-01-2023)

 0  2
இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(13-01-2023)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு – மார்கழி 29 - 

1,#நாள்:வெள்ளிக்கிழமை (13.1.2023)

2,#நட்சத்திரம் : உத்திரம் மதியம் 02:05 PM வரை பிறகு அஸ்தம்

3,#திதி : 03:17 PM வரை சஷ்டி பின்னர் சப்தமி

4,#யோகம் : சித்த - அமிர்த யோகம்

5,#கரணம் : வணிசை மாலை 03:03 வரை பின்பு பத்திரை

நல்லநேரம் : காலை : 9.30 -10.30 / மாலை 4.30 - 5.30

#வெள்ளிக்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை

சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

நல்ல நேரம்
09:30 - 10:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
12:30 - 01:30 கா / AM
06:30 - 07:30 மா / PM

இராகு காலம்
10.30 - 12.00
எமகண்டம்
03.00 - 04.30
குளிகை
07.30 - 09.00

சூலம்:மேற்கு
பரிகாரம்+வெல்லம்

#சந்திராஷ்டமம்
சதயம்+பூரட்டாதி

#நாள்:மேல் நோக்கு நாள்

#லக்னம்:தனுர் லக்னம் இருப்பு நாழிகை 00 வினாடி 22

சூரிய உதயம்
06:34 காலை / 
சூரிய அஸ்தமனம்
06:22 மாலை /

#தோற்றம்

இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா பிறந்த தினம்

#மறைவு

பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி 

திருத்தணி ஸ்ரீமுருக பெருமான் கிளி வாகன சேவை 

சங்கரன் கோயில் 
ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம் 

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ரிஷப ராசி நேயர்களே, உறவினர்களுடன் நல்லுறவு ஏற்படும். வீடு மாற்றும் யோசனை இருக்கும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, குடும்ப நபர்களின் ஆதரவு பெருகும். பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. மனக் குழப்பத்தை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படவும். முக்கிய வேலைகள் முடிவடையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கடகம்

கடக ராசி நேயர்களே, குடும்ப வசதி வாய்ப்புகள் பெருகும். பால்ய நண்பர்கள் ஆதரிப்பர். சோர்வுகள் அகன்று உற்சாகம் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, பிரபலங்களின் தொடர்பு கிட்டும். சுற்றி இருப்பவர்களை அரவணைத்து போகவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் சில நெருக்கடிகள் வரும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். நல்ல செய்தி காதில் வந்து விழும். எதிர்பாராத வகையில் செலவுகள் வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, சவாலான வேலைகளையும் எளிதில் முடிக்க முடியும். சொந்த பந்தங்கள் உங்கள் உதவியை நாடி வருவர். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, ஆன்மீக எண்ணம் மேலோங்கும். விலகிச் சென்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். புது பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். பிடிவாதப் போக்கை மாற்றிக்கொள்ளவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

மகரம்

மகர ராசி நேயர்களே, அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்கும். வாக்கு சாதுரியம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுபாட்டில் வரும். தொழில், வியாபாரம் விரிவடையும் 

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் நல்லது நடக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். திட்டமிட்ட பயணங்கள் தடைப்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பதட்டம் காணப்படும் சரியான முடிவுகள் எடுப்பதில் காலதாமதம் ஏற்படும் 

மீனம்

மீன ராசி நேயர்களே, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சாமர்த்தியம் உண்டாகும். நண்பர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow