பல்லி உடலில் விழும் பலன்கள்

பல்லி நம் உடலில் எங்கே விழுந்தால் என்ன பலன் என பார்ப்போம்

Aug 26, 2021 - 07:36
Aug 26, 2021 - 08:10
 0  206
பல்லி உடலில் விழும் பலன்கள்

பல்லி விழும் பலன் மற்றும் சாஸ்திரம் கூறும் தோஷங்கள் பலன்களை பார்க்கலாம்.

பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கின்றது. பல்லி எளிதாக அனைத்து வீடுகளிலும் காணக்கூடிய ஒன்று.

வீட்டில் பல்லி சத்தமிடுவது முதல் உடலில் விழுவது வரை சாஸ்திரத்தில் பல பலன்கள் இருக்கின்றது

பல்லி விழும் பலன்

பல்லி விழும் பலன் தலை

ஒருவரின் தலையில் பல்லி விழுந்தால் அவருக்கு வரவிருக்கும் கெட்ட நேரத்தை குறிப்பதாக இருக்கின்றது. அந்த கெட்ட நேரத்தை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று மறைமுகமாக சொல்லுகிறதாம் பல்லி.

அது மட்டுமின்றி மற்றவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு மற்றும் மனநிம்மதி இன்மை ஏற்படுமாம். அதுமட்டுமின்றி நன்கு தெரிந்தவர்கள் அல்லது உறவினர்களிற்கும் ஆபத்து ஏற்பட இருப்பதையும் எச்சரிப்பதாக இது அமைகிறது.

பல்லி விழும் பலன் வலது தோள்பட்டை

வலது பக்க தோள்பட்டையில் பல்லி விழுந்தால் நீங்கள் ஈடுபட்டு கொண்டிருக்கும் காரியம் அல்லது நீங்கள் தொடங்க இருக்கும் காரியம் வெற்றி பெறும் என்பதை உணர்த்துவதாக இருக்கும்.

பல்லி விழும் பலன் இடது தோள்பட்டை

இடது பக்க தோள்பட்டையில் பல்லி விழுந்தால் இதுவும் வெற்றிக்கான அறிகுறியே. இரண்டு பக்க தோள்பட்டையில் பல்லி விழுந்தாலும் நன்மையே.

பல்லி விழும் பலன் நெற்றி

நெற்றியில் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். அதுவே வலது பக்கம் பல்லி விழுந்தால் லக்ஷ்மி கரம் உண்டாகும்.

பல்லி விழும் பலன் மூக்கு

மூக்கின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். அதுவே மூக்கின் வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி உருவாகும்.

பல்லி விழும் பலன் காது

காதின் இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் அதிகரிக்கும். அதுவே காதின் வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள் அதிகரிக்கும்.

பல்லி விழும் பலன் வயிறு

வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி கிடைக்கும். அதுவே வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானிய கடாட்ஷம் ஆகும்.

பல்லி விழும் பலன் முதுகு

முதுகின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை வரும். அதுவே முதுகின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும்.

பல்லி விழும் பலன் முடி

அதவாது தலையில் அல்லாது முடி மீது பல்லி விழுந்தால் ஏதோ ஒருவகையில் நன்மை வரும் என்பதாகும்.

பல்லி விழும் பலன் முகம்

முகம் மீது பல்லி விழுந்தால் சீக்கிரமாக வீட்டிற்கு உறவினர்கள் வர போகிறார்கள் என்று அர்த்தமாம்.

பல்லி விழும் பலன் முகத்தின் புருவம்

முகத்தின் புருவ பகுதியில் பல்லி விழுந்தால் உயர் பதவியில் இருப்பவர்களிடம் இருந்து உதவி கிடைக்கும்.

பல்லி விழும் பலன் கண்கள்

கண்ணின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும். அதுவே கண்ணின் வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் கிடைக்கும்.

பல்லி விழும் பலன் மணிக்கட்டு

மணிக்கட்டின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். அதுவே மணிக்கட்டின் வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை அடையும்.

பல்லி விழும் பலன் இடது கை மற்றும் இடது கால்

இடது கையிலோ அல்லது இடது காலிலோ பல்லி விழுந்தால் மகிழ்ச்சி கிடைக்கும்.

பல்லி விழும் பலன் வலது கை மற்றும் வலது கால்

வலது கையிலோ அல்லது வலது காலிலோ பல்லி விழுந்தால் உங்கள் உடல் நலம் பாதிக்கப்படும் என்று அர்த்தமாம்.

பல்லி விழும் பலன் கணுக்கால்

கணுக்காலில் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் பயணம் உண்டாகும். அதுவே கணுக்காலில் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு அதிகரிக்கும்.

பல்லி விழும் பலன் பாதம்

பாதத்தில் பல்லி விழுந்தால் திடீர் பயணங்கள் உண்டாகும்.

பல்லி விழும் பலன் தொப்புள்

தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் மதிப்பு மிக்க பொருட்களான தங்கம், வைரம், இரத்தின கற்கள் கிடைக்க பெறுமாம்.

பல்லி விழும் பலன் தொடை

பல்லி உங்கள் தொடையில் விழுந்தால் நீங்கள் உங்கள் பெற்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்துவீர்களாம்.

பல்லி விழும் பலன் மார்பு

இடது பக்க மார்பில் பல்லி விழுந்தால் சுகம்கிடைக்கும். அதுவே வலது பக்க மார்பில் பல்லி விழுந்தால் இலாபம் கிடைக்குமாம்.

பல்லி விழும் பலன் கழுத்து

கழுத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும். அதுவே வலது பக்க கழுத்தில் விழுந்தால் மற்றொருவருடன் பகை உண்டாகும்.

பல்லி விழும் பலன் கால் நகம் அல்லது கால் விரல்

கால் நகங்களில் அல்லது கால் விரல்களில் பல்லி விழுந்தால் விபத்து அல்லது ஆபத்து உண்டாகும். எனவே அவதானமாக இருக்க வேண்டும் என்று பொருளாகும்.

பல்லி விழும் பலன் கை விரல்

கை விரல்களில் பல்லி விழுந்தால் பணவரவு உண்டாகும்.

பல்லி விழும் பலன் கை நகம்

கை நகங்களில் பல்லி விழுந்தால் பீடை அதாவது நோய்கள் வருவதற்கான அறிகுறிகளாகும்.

பல்லி விழும் பலன் பரிகாரம்

பல்லி விழுந்ததும் உடனே குளித்து விட்டு கோவிலுக்கு சென்று விடுங்கள். அல்லது வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றுங்கள். அவ்வாறு செய்தால் வரும் காலங்களில் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மை கிடைக்கும்.

.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow