இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(11-04-2020)

இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(11-04-2020)

Apr 11, 2020 - 01:34
 0  301
இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(11-04-2020)

#இன்றையபஞ்சாங்கம்

11-#ஏப்ரல்-2020
#சூரியோதயம்    : 6:12 am #சந்திரௌதயம்   : 10:00 PM
#சூரியாஸ்தமனம் : 6:28 pm #சந்திராஸ்தமனம் : 09:46 AM
#சூரியன்ராசி   : மீனம்
#சந்திரன்ராசி  : விருச்சிகம்
#மாதம்  : பங்குனி 29"ம் நாள்  
#பக்ஷம்    : கிருஷ்ண பக்ஷம்


#பஞ்சாங்கம்

1️⃣,#வாரம்   : காரி(சனி)

2️⃣,#திதி     : சதுர்த்தி இறுதி 07:01 pm பஞ்சமி

3️⃣,#நட்சத்திரம் : அனுஷம் இறுதி 08:11 pm 

4️⃣,#யோகம்    : வியாதிபாதம் இறுதி 11:20 pm வரியான்

5️⃣,#கரணம்    :பவம் 08:11 am 
பாலவம் 07:01 pm
கௌலவம் 07:01 pm

��#நல்ல_நேரம்��     

அபிஜித்  : 11:56 am – 12:45 pm

அமிர்த காலம்  : 10:31 am – 12:01 pm

ஆனந்ததி யோகம் 
08:11 pm Musal

☻#கெட்ட_நேரம்☻ 

ராகுகாலம்   : 9:53 AM – 11:10 AM

யம கண்டம் : 1:44 PM – 3:01 PM

தியாஜ்யம்   : 01:37 am – 03:06 am

குளிகன்      : 7:19 AM – 8:36 AM

#துர்முஹுர்த்தம் 

1. 08:41 AM – 09:22 AM

#நாள்_முழுவதும் #சித்தயோகம். 
நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது.

#சுப_ஹோரைகள் 
காலை 06.00-08.00, காலை10.00-10.30. 
மதியம் 01.00-03.00,  
மாலை 05.00-06.00,  
இரவு 08.00-10.00   

#சந்திராஷ்டமம்
#அஸ்வினி
#பரணி

இன்றைய ராசி பலன்

#மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

#ரிஷபம்
 ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

# மிதுனம்
 மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. -

 #கடகம்
 கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமான கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சிக்கல்கள் உண்டாகும். கவனம் தேவை. மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

# சிம்மம்
 சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். தடைப்பட்ட திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான நாளாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு ஆறுதலை கொடுக்கும். 

#கன்னி
 கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை குறைவு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். 

#துலாம்
 துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும். நெருங்கியவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வெளி வட்டார நட்பு நற்பலனை தரும்.

# விருச்சிகம் 
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் நிலை ஏற்படலாம். தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். 

#தனுசு 
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். வங்கி கடன் தேவையான நேரத்தில் கிடைக்கும். அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிசுமை குறையும். 

#மகரம்
 மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.
# கும்பம்
 கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்களால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

# மீனம்
 மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலக விஷயங்களில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow