இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(06-05-2020)

இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(06-05-2020)

 0  136
இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(06-05-2020)


#இன்றையபஞ்சாங்கம்

6-#மே-2020
#சூரியோதயம்    : 6:00 am #சந்திரௌதயம்   : 05:38 pm
#சூரியாஸ்தமனம் : 6:32 pm #சந்திராஸ்தமனம் : 05:45 am
#சூரியன்ராசி   : மேஷம்
#சந்திரன்ராசி  :   துலாம்
#மாதம்  : சித்திரை 22'ம் நாள்  
#பக்ஷம்    : சுக்ல பக்ஷம்

 #பஞ்சாங்கம்

1️⃣ வாரம் : அறிவன்(புதன்)

2️⃣,திதி     : சதுர்தசி இறுதி 07:45 pm பௌர்ணமி

3️⃣ நட்சத்திரம் : சித்திரை இறுதி 01:51 pm சுவாதி

4️⃣,யோகம்    : சித்தி இறுதி 08:38 pm வியாதிபாதம்

5️⃣,கரணம்    :கரசை 09:33 am
வனசை 07:45 pm 
பத்திரை 07:45 pm

#நல்ல_நேரம் 

அபிஜித்       : 11:51 am – 12:41 pm

அமிர்த காலம்     : 08:11 am – 09:36 am

ஆனந்ததி யோகம் : 01:51 pm Dhumra

#கெட்ட_நேரம்

ராகுகாலம்   : 12:26 pm – 1:42 pm

யம கண்டம் : 8:35 am – 9:52 am

தியாஜ்யம்   : 18:49 pm – 20:14 pm

குளிகன்      : 11:09 am – 12:26 pm

#துர்முஹுர்த்தம் 

12:05 pm – 12:46 pm

#நாள்_முழுவதும் #சித்தயோகம். 
நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. நரசிம்ம ஜெயந்தி. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

#சுப_ஹோரைகள் 
காலை 06.00-07.00, 
காலை 09.00-10.00,  
மதியம் 1.30-2.00,  
மாலை 04.00-05.00, 
இரவு 07.00-09.00,  11.00-12.00

#சந்திராஷ்டமம்
#உத்திரட்டாதி
#ரேவதி

இன்றைய ராசி பலன்

#மேஷம் 
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு வாகனங்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

# ரிஷபம் 

 ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி குறையும். தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றினாலும் எதையும் சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் வேலைபளு குறையும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

# மிதுனம் 
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் அனாவசியமாக வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

# கடகம் 
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய விஷங்களை செயல்படுத்துவதன் மூலம் லாபம் காண்பீர்கள். 

#சிம்மம் 
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் பேச்சு திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வங்கி சேமிப்பு உயரும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி அன்பு அதிகரிக்கும்.

# கன்னி 
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் உதவி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். வருமானம் பெருகும். பொருளாதார நிலை சீராகும். ஆரோக்கித்தில் கவனம் தேவை.

# துலாம் 
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். வீட்டில் ஒற்றுமை குறையும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாராம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் தோன்றி மறையும்.

# விருச்சிகம்
 விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சில மாற்றங்களை சந்திக்கும் சூழல் உருவாகும். வருமானம் பெருகும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். சேமிப்பு உயரும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.

# தனுசு 
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாக முடியும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற தடைகள் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புடன் செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

# மகரம்
 மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாக இருக்கும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் கிட்டும். பணவரவு தாராளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் வழியே அனுகூலமான பலன்கள் கிட்டும். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். 

#கும்பம் 
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் உண்டாகும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தம்பதியர் ஒற்றுமை ஒங்க அனுசரித்து செல்வது நல்லது. 

#மீனம்
 மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோக ரீதியாக சில பிரச்சனைகள் ஏற்படலாம். வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow