திருக்குறள் - குறள் 1240
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: உறுப்புநலனழிதல்.
திருக்குறள் - குறள் 1240
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது.
மு.வரதராசனார் உரை:
காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.
சாலமன் பாப்பையா உரை:
குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே!.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று - தண் வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பமுற்றது; ஒண்ணுதல் செய்தது கண்டு. தனக்கு அயலாய ஒண்ணுதல் விளைத்த பசப்பைக் கண்டு. ('அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊ
மணக்குடவர் உரை:
ஒள்ளியநுதல் பசந்ததுகண்டு கண்ணிலுண்டான பசலை கலங்கிற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தனக்கு அருகில் இருக்கும் ஒளிபொருந்திய நெற்றியடைந்த பசப்பு நிறத்தினைக் கண்டு கண்களின் பசப்பு நிறம் துன்பத்தினை அடைந்து விட்டது.
Translation:
The dimness of her eye felt sorrow now,
Beholding what was done by that bright brow.
Explanation:
Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்