திருக்குறள் - குறள் 1239

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: உறுப்புநலனழிதல்.


திருக்குறள் - குறள் 1239


முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.

மு.வரதராசனார் உரை:
தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.

சாலமன் பாப்பையா உரை:
(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) முயக்கிடைத் தண் வளி போழ - அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம் முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக; பேதை பெருமழைக்கண் பசப்புற்ற - அத்துணையிடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக் கண்கள் பசப்புற்றன; அத்தன்மையவான கண்கள், மலைகளும் காடும் நாடுமாய இவ்விடைய


மணக்குடவர் உரை:
யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின்கண்ணே எனது உடம்பை அகற்ற, அம்முயக்கிடையே சிறு காற்று ஊடறுத்தலானே எனது நீக்கத்தைப் பொறாது பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன. இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூறுவன.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இறுகத் தழுவிய கைகளைத் தளர்த்தியதால் இருவருக்குமிடையே சிறு காற்று நுழைந்தது. அந்தச் சிறிய இடைவெளியினையும் பொறுக்க முடியாமல் இப்போதையினுடைய குளிர்ச்சி பொருந்திய கண்கள் பசப்பு நிறம் அடைந்தன.

Translation:
As we embraced a breath of wind found entrance there;
The maid's large liquid eyes were dimmed with care.

Explanation:
When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்