திருக்குறள் - குறள் 1238
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: உறுப்புநலனழிதல்.
திருக்குறள் - குறள் 1238
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது.
மு.வரதராசனார் உரை:
தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!.
பரிமேலழகர் உரை:
(வினைமுடிதது மீளலுற்ற தலைமகன், முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) முயங்கிய கைகளை ஊக்க - தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒருஞான்று யான் நெகிழ்ந்தேனாக; பைந்தொடி பேதை நுதல் பசந்தது - அத்துணையும் பொறாது பைந்தொடிகளை அணிந்த பேதைய
மணக்குடவர் உரை:
யான் பிரிவதாக நினைத்து அவள் முயங்கிய கைகளை நீக்கினேனாக; அதனை யறிந்து பசுத்ததொடியினையுடைய பேதை நுதல் பசந்தது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தன்னை இறுகத் தழுவிய கைகளை இவளுக்கு நோகும் என்று கருதி ஒரு போது நான் தளர்த்தினேன், அதனையும் கூடப் பொறுக்கமுடியாமல் பசிய வளையவல்களையணிந்த இப்போதையினுடைய நுதல் பசலை நிறம் அடைந்தது.
Translation:
One day the fervent pressure of embracing arms I checked,
Grew wan the forehead of the maid with golden armlet decked.
Explanation:
When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்