திருக்குறள் - குறள் 1231

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: உறுப்புநலனழிதல்.


திருக்குறள் - குறள் 1231


சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.

மு.வரதராசனார் உரை:
இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.

சாலமன் பாப்பையா உரை:
பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன.

பரிமேலழகர் உரை:
[அஃதாவது , தலைமகள்தன் கண்ணும் , தோளும் , நுதலும் முதலாய அவயவங்கள் தம் அழகு அழிதல் . இஃது இரக்கம் மிக்குழி நிகழ்வதாகலின் , பொழுது கண்டு இரங்கலின் பின் வைக்கப்பட்டது.](ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றா


மணக்குடவர் உரை:
நமக்குத் துன்பம் ஒழிய வேண்டி நெடுநெறிக்கண் சென்றாரை நினைத்துக் கண்கள் நறுவிய பூக்களைக் கண்டு நாணா நின்றன. பலகால் அழுதலால் நிறங்கெட்டதென்றாவா றாயிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பிரிவினால் பொறுத்திருக்க முடியாத துன்பத்தினை நமக்கு உண்டாக்கி நெடுந்தூரம் சென்ற காதலரை நினைத்து, அழுவதால் கண்கள் ஒளியிழந்து முன்பு தமக்கு நாணமுற்ற மலர்களுக்கு இன்று தாம் நாணிவிட்டன.

Translation:
Thine eyes grown dim are now ashamed the fragrant flow'rs to see,
Thinking on him, who wand'ring far, leaves us in misery.

Explanation:
While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்