திருக்குறள் - குறள் 1220

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: கனவுநிலையுரைத்தல்.


திருக்குறள் - குறள் 1220


நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?.

மு.வரதராசனார் உரை:
நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?.

சாலமன் பாப்பையா உரை:
என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) இவ்வூரவர் நனவினான் நம் நீத்தார் என்பார் - மகளிர் நனவின்கண் நம்மை நீத்தார் என்று நம் காதலரைக் கொடுமை கூறாநிற்பார்; கனவினான் காணார்கொல் - அவர் கனவின்கண் நீங்காது வருதல் கண்டறியாரோ? ('என்னொடு தன்னிடை வேற்றுமை இன்றாயின், யான் கண்டது தானும் கண்ட


மணக்குடவர் உரை:
இவ்வூரார் நனவின்கண்ணே நம்மை நீக்கியகன்றா ரென்று அவரைக் கொடுமை கூறாநிற்பர்: அவர் அவரைக் கனவின்கண் காணார்களோ?. இஃது இவ்வேறுபாடு அலராயிற்று என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இவ்வூர் மகளிர் நனவிலே நம்மைவிட்டுப் போனார் என்று நம் காதலரைக் கொடுமை கூறுகிறார்கள். அவர் கனவில் நீங்காது வருவதனைக் கண்டறியாரோ?.

Translation:
They say, that he in waking hours has left me lone;
In dreams they surely see him not,- these people of the town.

Explanation:
The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்