திருக்குறள் - குறள் 1219

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: கனவுநிலையுரைத்தல்.


திருக்குறள் - குறள் 1219


நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.

மு.வரதராசனார் உரை:
கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை:
இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) கனவினான் காதலர்க் காணாதவர் - தமக்கு ஒரு காதலர் இன்மையின் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்; நனவினான் நல்காரை நோவர் - தாம் அறிய நனவின்கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நோவர் நிற்பர். (இயற்பழித்தது பொறாது புலக்கின்றாள் ஆகலின், அயன்மை தோன்ற


மணக்குடவர் உரை:
நனவின்கண் வந்து காதலரை நோவாநிற்பர், கனவின்கண் அவரைக் காணாதவர்: காண்பாராயின், நோவார். இது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தமக்கு ஒரு காதலர் இல்லாமையால், அவரைக் கனவில் கண்டறியாத மகளிர், தாம் அறிய நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை அன்பிலர் என்று நொந்து கொள்ளுகின்றனர்.

Translation:
In dreams who ne'er their lover's form perceive,
For those in waking hours who show no love will grieve.

Explanation:
They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்