திருக்குறள் - குறள் 1216

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: கனவுநிலையுரைத்தல்.


திருக்குறள் - குறள் 1216


நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.

மு.வரதராசனார் உரை:
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

சாலமன் பாப்பையா உரை:
கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நனவென ஒன்று இல்லையாயின் - நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின்; கனவினான் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார். ('ஒன்று' என்பது, அதன் கொடுமை விளக்கி நின்றது. அஃது இடையே புகுந்து கனவைப் போக்கி அவரைப் பிரி


மணக்குடவர் உரை:
நனவென்று சொல்லப்படுகின்ற ஒருபாவி இல்லையாயின் கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின் கனவிலே வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார்.

Translation:
And if there were no waking hour, my love
In dreams would never from my side remove.

Explanation:
Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்