தன் அழகிய மகனின் புகைப்படத்தை வெளியிட்ட பாடகி ஷ்ரேயா கோஷல்

தன் அழகிய மகனின் புகைப்படத்தை வெளியிட்ட  பாடகி ஷ்ரேயா கோஷல்

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர் ஷ்ரேயா கோஷல். 2015ல் ஷைலாதித்யா முகோபாத்யாயா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் ஷ்ரேயா. ஆறு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தைக்கு அம்மாவானார். நேற்று தனது மகன் தேவ்யான் பிறந்து ஆறு மாதங்கள் ஆனதை அடுத்து மகனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து மகன் சொல்வது போல ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், “அனைவருக்கும் வணக்கம். நான் தேவ்யான், எனக்கு இன்றுடன் ஆறு மாதம் ஆகிறது. என்னைச் சுற்றியுள்ள உலகத்தைக் கவனிப்பதில் நான் பிஸியாக இருக்கிறேன். எனக்குப் பிடித்த பாடல்கனைக் கேட்பது, பல படங்களுடன் இருக்கும் புத்தகங்களைப் படிப்பது, சுமாரான ஜோக்குகளுக்கெல்லாம் சத்தமாக சிரிப்பது, எனது அம்மாவுடன் ஆழ்ந்த விவாதம் செய்து என இருக்கிறேன். உங்கள் அன்பையும், ஆசீர்வாதத்தையும் தருவதற்கு மிக்க நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஷ்ரேயாவிற்கும் அவரது மகனுக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.