கருப்பாக இருந்த நடிகை மைனா நந்தினி கலராக மாறியது எப்படி?

Nov 29, 2021 - 09:46
 0  101
கருப்பாக இருந்த நடிகை மைனா நந்தினி கலராக மாறியது எப்படி?

சரவணன்-மீனாட்சி என்ற சீரியல் விஜய் தொலைக்காட்சியில் படு பிரபலம். நடிகை ரச்சிதா, மீனாட்சியாக நடிக்க தொடங்கிய அந்த சீசனில் அவரது தோழியாக நடித்தவர் நந்தினி.

அதில் அவரது பெயர் மைனா, அவரது கதாபாத்திரம் மக்களிடம் நன்கு ரீச் ஆக அதுவே அவரது அடைமொழி பெயராக மாறியது. நந்தினி இப்போதும் தொடர்ந்து சீரியல்கள் நடிப்பது, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என பிஸியாக இருக்கிறார்.

யோகேஷ் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்ய இப்போது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

மைனா நந்தினி இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கக்கூடிய ஒரு நடிகை. அண்மையில் ஒரு ரசிகர்கள் அவரிடம் கருப்பாக இருந்த நீங்கள் கலராக மாறியது எப்படி என கேட்டுள்ளார்.

அதற்கு அவர், ABC ஜுஸ் தான் காரணம் என கூறியுள்ளார். ஆப்பிள், பீட்ரூட், கேரட் கொஞ்சம் இஞ்சி மற்றும் கொத்தமல்லி என அனைத்தையும் சேர்த்து வாரத்தில் இரண்டு முறை குடித்தால் கலர் மாற்றம் ஏற்படும் என கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow