சிம்புவின் நெகிழ்ச்சியான தருணங்கள் .

நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை உணர்வுகளையும் அடக்கிவிட முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளார் சிம்பு .

சிம்புவின் நெகிழ்ச்சியான தருணங்கள் .

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛மாநாடு'. யுவன் இசையமைத்து இருந்தார். சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார். பல தடைகளை தாண்டி வெளிவந்த இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இரு நாட்களிகலேயே ரூ.14 கோடி வசூலித்தது. தொடர்ந்து படத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்து வருவதை படக்குழுவினரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படியொரு வெற்றியை தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிம்பு.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : ‛‛இறைவன் மீதும் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து மிக அழகாக உழைத்த படம் மாநாடு. எப்படியாவது என்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது.

மாநாடு படம் உலகம் முழுக்க மிகப்பெரும் வெற்றியை அள்ளியெடுத்துள்ளது. இதற்கு காரணமான என் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அற்புதமான இயக்கத்தை தந்த வெங்கட்பிரபு, அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், மாநாடு படக்குழுவும், என் தாய், தந்தை, படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரையுலக நண்பர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், என் ரத்தமாகிய அன்பு ரசிகர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை உணர்வுகளையும் அடக்கிவிட முடியாது. ஆனால், பதிலுக்கு தெரிவிக்க வேறு வார்த்தை இல்லையே... ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகளை தரையில் விழ விடாமல் தாங்கிக் கொண்ட உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன். வெறியோடு உலகம் முழுக்க வெற்றியை தேடி தந்திருக்கிறீர்கள், அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.