ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நயன்தாரா..

தென் இந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக இருப்பவர்தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

Aug 22, 2021 - 12:24
Aug 22, 2021 - 12:26
 0  688
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நயன்தாரா..

தென் இந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக இருப்பவர்தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கும் இவர், விரைவில் அவரை திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாரா தனது திருமணம் விரைவில், ரகசியமாக நடைபெறும் என்றார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் ஓடிடியில் வெளியான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக இவர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கானுடன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது இவர் நடிக்கவிருக்கும் முதல் ஹிந்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகளில் இறங்கியுள்ளாராம் அட்லீ.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தின் ஷூட்டிங் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவின் காட்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், நயன்தாரா தங்கியிருந்த ஓட்டல் முன் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் கத்தி கோஷமிட்டு நயன்தாராவின் காரை சூழ்ந்து கொண்டனர்.

இதையடுத்து அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. முன்னதாக நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்திருந்தார். இப்படமும் புதுச்சேரியில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு வீடியோ பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

nayanthara-video

நடிகைகள் எங்கு சென்றாலும் ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொள்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதே சமயம் ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நயன்தாரா நடித்துவருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow