கண்களை தானம் செய்து இறந்த பின்பும் உயிர்வாழும் சூப்பர் ஸ்டார்

Oct 30, 2021 - 07:06
 0  33
கண்களை தானம் செய்து இறந்த பின்பும் உயிர்வாழும்  சூப்பர் ஸ்டார்

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ராஜ்குமார். இவரது மகனான புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காலமானார். இது கன்னட திரை உலகிற்கும் மற்றும் கன்னட மக்களுக்கு பெரிய துயரத்தை ஏற்படுத்தியது.

புனித் ராஜ்குமார் ஒரு நடிகராக மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் அதையும் தாண்டி பல மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்துள்ளார். சமீபத்தில் இவரது மறைவை கேட்டு அவரது ரசிகர்கள் கதறி கதறி அழுத வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

மேலும் பி டிவி செய்தி வாசிப்பாளர் புனித் ராஜ்குமாரின் மரணத்தை வாசிக்கும் போது தன்னை அறியாமலேயே கண்கலங்கி வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள புனித் ராஜ்குமார் இறப்பதற்கு முன்பு ஒரு அற்புதமான செயலை செய்துள்ளார்.

தனது இரு கண்களையும் தானம் செய்துள்ளார். அவருடைய கண்களை அம்புலன்ஸ் மூலம் எடுத்து சென்ற பொழுது பலர் கண்ணீர் விட்டு அழுதனர். இவ்வுலகை விட்டு அவர் மறைந்தாலும் அவரது புகழும் செயலும் என்றும் மறையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இவர் கிட்டத்தட்ட 15 பள்ளிக்கூடங்கள் ஏழை எளிய மக்களுக்காக இலவசமாக நடத்தி வருகிறார். 26 அனாதை இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், 19 மாட்டு கொட்டாய் மற்றும் 1800 மாணவர்களுக்கு இலவசமாக பள்ளி கட்டணத்தையும் செலுத்தி வருகிறார். இது போன்ற பல செயல்கள் மூலம் அனைவருக்கும் நல்லது செய்து வந்துள்ளார் புனித் ராஜ்குமார்.

ஒரு சூப்பர் ஸ்டார் மகனாக இருந்தாலும் புனித் ராஜ்குமார் அனைவரிடமும் நேர்மையாகவும் எளிமையாக பழகுவார் என பல பிரபலங்களும் தற்போது தங்களது ஆழ்ந்த இரங்கலுடன் தங்களது மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow