நடிகை சினேகா பெற்ற 4 விருதுகள்

Oct 30, 2021 - 07:28
 0  170
நடிகை  சினேகா பெற்ற  4 விருதுகள்

சினேகா ஒரு மாடலாக இருந்து தமிழ் சினிமாவில் என்னவளே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவருடைய குடும்பப்பாங்கான முகமும், இவர் தேர்ந்தெடுக்கும் படங்களும் என தனி ரசிகர் கூட்டமே இருந்தது. சினேகா அதிகம் கிராமத்து சாயலில் இருக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். இவர் விருது பெற்ற திரைப்படங்கள் என்னவென்று பார்க்கலாம்.

ஆனந்தம்: லிங்குசாமி இயக்கத்தில் 2001 இல் வெளிவந்த திரைப்படம் ஆனந்தம். இப்படத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா, ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் என பலர் நடித்திருந்தார்கள். கூட்டுக்குடும்பத்தில் உணர்த்தும் இப்படத்தில் அப்பாஸ் ஜோடியாக சினேகா நடித்து இருந்தார். இப்படத்தில் துணை நடிகைக்காக சினேகாவிற்கு விருது கிடைத்தது.

புன்னகை தேசம்: ஷாஜகான் இயக்கத்தில் 2002 இல் வெளிவந்த திரைப்படம் புன்னகை தேசம். இப்படத்தில் தருண், சினேகா, ஷாம்வரதன், தாமு, குணால், நிழல்கள் ரவி, பிரீத்தா விஜயகுமார், வடிவுகரசி, மலேசியா வாசுதேவன் என பலர் நடித்திருந்தார்கள். இப்படம் நட்பின் ஆழத்தை உணர்த்தும் படமாக இருந்தது. இப்படத்தில் தருணுக்கு ஜோடியாக சினேகா நடித்து இருந்தார்.

உன்னை நினைத்து: விக்ரமன் இயக்கத்தில், சிற்பி இசையில் வெளியான திரைப்படம் உன்னை நினைத்து. சூர்யா, லைலா, சினேகா, ரமேஷ் கண்ணா, தலைவாசல் விஜய் என பலரும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் சினேகாவின் ராதா கதாபாத்திரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. இப்படத்தில் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது சினேகாவுக்கு கிடைத்தது.

பிரிவோம் சந்திப்போம்: கரு பழனியப்பன் இயக்கத்தில் 2008ல் வெளியான திரைப்படம் பிரிவோம் சந்திப்போம். இப்படத்தில் சேரன், சினேகா, ஜெயராம், லட்சுமி ராமகிருஷ்ணன் என பலர் நடித்திருந்தார்கள். காரைக்குடியில் உள்ள செட்டியார் சமுதாயத்தின் கூட்டுக் குடும்பத்தை பற்றிய கதை. இப்படத்தின் சிறந்த நடிகைக்கான விஜய் விருது சினேகா பெற்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow