நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ள நயன்தாரா.

நிகழ்ச்சி  தொகுப்பாளராக உள்ள நயன்தாரா.

இன்று பிரபலங்களாக வலம் வரும் பல நட்சத்திரங்கள் அவர்கள் சினிமாவுக்கு வருவதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது தங்கமலை ரகசியம் போன்றது தான் அவர்களது ரசிகர்கள் பலரும் அறியாதது. ஒருசிலர் மட்டும் அதை வெளிப்படையாக சொல்லியிருப்பார்கள். சிலர் பற்றிய அந்த விபரங்கள் அவர்கள் பிரபலமான பின் திடீரென ஒருநாள் வெளியாவதுண்டு.

அந்தவகையில் இன்று லேடி சூப்பர்ஸ்டார் என்கிற அந்தஸ்துடன் வலம் வரும் நடிகை நயன்தாரா, சினிமாவுக்குள் நுழைவதற்கு முன் ஒரு மலையாள டிவி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்துள்ளார். அவர் அப்படி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வீடியோ ஒன்று முன்பே வெளியாகி இருந்தது. இந்தநிலையில் தற்போது அந்த வீடியோ மீண்டும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.