பிலிம்பேர் விருதிற்கு 12பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்ட தொடர்.

Nov 17, 2021 - 04:22
 0  58
பிலிம்பேர் விருதிற்கு 12பிரிவுகளில்   பரிந்துரை செய்யப்பட்ட தொடர்.

கடந்த ஜூன் மாதம் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற தொடர் தி பேமிலி மேன் 2. இதில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி, பவன் சோப்ரா, ஷாரிப் ஹஸ்மி உள்பட பலர் நடித்திருந்தார்கள். ராஜ் மற்றும் டீக்கே இயக்கி இருந்தார்கள். இலங்கையில் இருந்து ஒரு அசைன்மெண்டுக்காக இந்தியா வரும் ஒரு மனித வெடிகுண்டு பெண்ணின் கதை. அந்த பெண்ணாக சமந்தா நடித்திருந்தார்

இந்த தொடருக்கு தமிழ்நாட்டில் சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. என்றாலும் சமந்தாவின் நடிப்பு பரவலான பாராட்டுகளை குவித்தது. இந்த நிலையில் இந்த தொடர் பிலிம்பேர் விருக்கு 12 பிரிவின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த சீரிஸ், இயக்குனர், நடிகர், நடிகை, ஒரிஜினல் ஸ்டோரி, குணசித்ர நடிகை ஆகியவை முக்கியமான பிரிவுகள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow