பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : ஏனடி ரோஜா…….
ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு
எதனைக் கண்டாயோ
அன்று போனவள் இன்று
வந்து விட்டாள் என்று
புன்னகை செய்தாயோ
பெண் : ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு
எதனைக் கண்டாயோ
அன்று போனவள் இன்று
வந்து விட்டாள் என்று
புன்னகை செய்தாயோ
பெண் : மொட்டாக நின்றவளே
முள்ளோடு வந்தவளே
மொட்டாக நின்றவளே
முள்ளோடு வந்தவளே
பெண் : முத்து நகைகளை கொட்டி அளந்திடும்
முகத்தைக் கொண்டவளே
முத்து நகைகளை கொட்டி அளந்திடும்
முகத்தைக் கொண்டவளே
பெண் : கட்டான ராணி என்று
கட்டாளம் சேலைக் கொண்டு
கட்டான ராணி என்று
கட்டாளம் சேலைக் கொண்டு
கண்கள் மயங்கிட கன்னம் சிவந்திட
தளுத்து நின்றவளே
கண்கள் மயங்கிட கன்னம் சிவந்திட
தளுத்து நின்றவளே
பெண் : ஏனடி ரோஜா…….
ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு
எதனைக் கண்டாயோ
அன்று போனவள் இன்று
வந்து விட்டாள் என்று
புன்னகை செய்தாயோ
பெண் : {இரத்தின கம்பளமே
அடி முத்திரை மோதிரமே
நீ நாளைப் பொழுதுக்குள்
வாடி விழுந்திடும்
மாயக் கதையடியோ} (2)
பெண் : நான் சித்திர பெண்மையடி
இது தெய்வ பருவமடி
நான் சித்திர பெண்மையடி
இது தெய்வ பருவமடி
பெண் : எத்தனை காலங்கள் மாறிய போதிலும்
என்றும் இளமையடி எனக்கு
என்றும் இளமையடி
எத்தனை காலங்கள் மாறிய போதிலும்
என்றும் இளமையடி எனக்கு
என்றும் இளமையடி
பெண் : ஏனடி ரோஜா…….
ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு
எதனைக் கண்டாயோ
அன்று போனவள் இன்று
வந்து விட்டாள் என்று
புன்னகை செய்தாயோ
பெண் : ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு
எதனைக் கண்டாயோ
அன்று போனவள் இன்று
வந்து விட்டாள் என்று
புன்னகை செய்தாயோ