பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : சின்ன சின்னக் கன்னி
எனக்கென்ன வேண்டும்
தேவனவன் திருவடி
நிழல் வேண்டும்
பெண் : சின்ன சின்னக் கன்னி
எனக்கென்ன வேண்டும்
தேவனவன் திருவடி
நிழல் வேண்டும்
பெண் : வண்ண வண்ணக் கன்னி
எனக்கென்ன வேண்டும்
அவன் வாசலுக்குச் செல்ல
ஒரு வழி வேண்டும்
பெண் : சின்ன சின்னக் கன்னி
எனக்கென்ன வேண்டும்
தேவனவன் திருவடி
நிழல் வேண்டும்
பெண் : {மஞ்சளுக்கு வஞ்சியன்று
வாடி நின்றேன்
மண மங்கலத்தை கண்களிலே
தேடி நின்றேன்} (2)
பெண் : தஞ்சமென்று நெஞ்சமொன்றில்
ஆடி நின்றேன்
இன்று தன்னந்தனியாக
நின்று வாடுகின்றேன்
அம்மமம்மா அம்மமம்மா அம்மமம்மா
பெண் : சின்ன சின்னக் கன்னி
எனக்கென்ன வேண்டும்
தேவனவன் திருவடி
நிழல் வேண்டும்
பெண் : {காட்டு மகள் வீடு விட்டு
நாடு சென்றேன்
தெய்வ காதலுக்குப் பாட்டெடுத்துப்
பாடி நின்றேன்} (2)
பெண் : நாட்டு மக்கள் வாசல் தன்னை
நாடி நின்றேன்
இன்று நாடுமில்லை காடுமில்லை
வாடுகின்றேன்
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா
பெண் : {நாளை வரும் பாவையர்க்கு
ஒரு வார்த்தை
காதல் நாடகத்தில் நீங்கள்
பங்கு பெற வேண்டாம்} (2)
பெண் : காளையர்க்கு காதல் மொழி
தர வேண்டாம்
இரு கண்கலங்கி வாழ்விழந்து
கெட வேண்டாம்
அம்மமம்மா அம்மமம்மா அம்மமம்மா
பெண் : சின்ன சின்னக் கன்னி
எனக்கென்ன வேண்டும்
தேவனவன் திருவடி
நிழல் வேண்டும்
பெண் : வண்ண வண்ணக் கன்னி
எனக்கென்ன வேண்டும்
அவன் வாசலுக்குச் செல்ல
ஒரு வழி வேண்டும்
ஒரு வழி வேண்டும்