பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : வீணை மீட்டும் கைகளே
மாலை சூட்டவா ஆஅ…..ஆ…..
மாலை சூட்டும் கைகளே
வீணை மீட்ட வா ஆஅ……ஆ…..
வீணை மீட்டும் கைகளே
உலகமே புகழ்ந்ததே
அது உண்மை அல்லவா
வீணை மீட்டும் கைகளே
பெண் : கண்ணனோடு ராதை என்றார்
ராமனோடு சீதை என்றார்
அருகு போல வேர்கள் கண்டோம்
மூங்கில் போல சொந்தம் கொண்டோம்
பெண் : எனை உனக்கென
ஈசன் வைத்தான்
இலை மறைவினில் பாசம் வைத்தான்
நமது வீட்டு ராகம்
உலகம் எங்கும் பாட்டு
பெண் : வீணை மீட்டும் கைகளே
மாலை சூட்டவா ஆஅ…..ஆ…..
மாலை சூட்டும் கைகளே
வீணை மீட்ட வா ஆஅ……ஆ…..
வீணை மீட்டும் கைகளே
பெண் : ஆறு ஒன்று ஓடும்போது………
கங்கை போல ஓட வேண்டும்
நூறு நூறு ஆண்டு வாழ்ந்தால்
நம்மை போல வாழ வேண்டும்
பெண் : இது இறைவனின்
காதல் கட்டில்
ரதி மன்மதன் ஆடும் தொட்டில்
தலைவனே உன் ஆணை
தலைவி என்னும் வீணை
பெண் : வீணை மீட்டும் கைகளே
மாலை சூட்டவா ஆஅ…..ஆ…..
மாலை சூட்டும் கைகளே
வீணை மீட்ட வா ஆஅ……ஆ…..
வீணை மீட்டும் கைகளே