பாடகி : மனோரமா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : யய்…….. யய் யய் யய் யய்
பிப்பிப்பி பிப்பிப்பி
பிப்பி பிப்பி பிப்பி பிப்பி
பெண் : கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்
பெண் : கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்
மூணாம் சாமத்தில் உல்லாசமாம்
அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம்
பெண் : கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்
பெண் : ஆலமர ஊஞ்சலிலே
கூடு ஒன்னு ஜோடி ஒன்னு
விசில் : ……………………………
பெண் : ஆசப்பட்டு வாழ்ந்ததிலே
குஞ்சுகளோ ஐஞ்சு பத்து
ஊமத்தம் பூவு……
ஊமத்தம் பூவு தாலாட்டு பாட….
அட எந்நாளும் கொண்டாட்டம் இன்பங்களாம்
பெண் : கானாங்…..ஐய கானாங்…..
ஹ்ககும்….கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்…..
மூணாம் சாமத்தில் உல்லாசமாம்
அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம்
பெண் : கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்
பெண் : சொல்லாம சொன்னாத்தான் புரிஞ்சுக்கனும்
எல்லாமே முன்னாலே தெரிஞ்சுக்கனும்
சொல்லாம சொன்னாத்தான் புரிஞ்சுக்கனும்
எல்லாமே முன்னாலே தெரிஞ்சுக்கனும்
ஏக்கத்திலே ஹா தூக்கமில்லே
அட என்னாங்க ஊமைக்கு பதில் சொல்லுங்க
பெண் : கானாங்…..ஐய கானாங்…..
ஹாஹான்….கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்…..
மூணாம் சாமத்தில் உல்லாசமாம்
அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம்
பெண் : கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்
பெண் : ஜிம் ப்ரூம் ஜிம்ப்ரூம்
ப்ரூம் ப்ரூம் ப்ரூம் ப்ரூம் ப்ரூம்
பெண் : ஊதுபத்தி ஏத்தி வச்சேன்
ஊசிமல்லி வாங்கி வச்சேன்
பெண் : கூடத்திலே பாய் விரிச்சேன்
குத்துக்கல்லா காத்திருந்தேன்
மலைவாழை தோப்பு…….ஹா ஹா
மலைவாழை தோப்பில் மச்சானை காணோம்
அட வாங்கோன்னா
வந்தாலே சந்தோஷம்தான்
பெண் : கானாங்…..ஹஹான் கானாங்…..ஐயா
கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்…..
மூணாம் சாமத்தில் உல்லாசமாம்
அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம்
பெண் : கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்