வனத்திலோடிய மானிட வீரனை
எண்ணம் நாடிய விசாரமா
கவனத்திலே அவனை எண்ணி
கண்கள் மலர்ந்தாள் பூப்போலே (வனத்தில்)
தேவி காதலன் மானிட மன்னன்
நவமன் மதனாய் ஆகினான் ஆஹா....
நவமன் மதனாய் ஆகினான்
மன்மதனின் தேர் வேகத்தினாலே
மைவிழி வஞ்சி வாடினாள் – சிறு
மைவிழி வஞ்சி வாடினாள்.....
அழகிய சிலையை நாயகனென்றே
மனதால் நினைந்தே ஆடினாள் – ஆஹா
மனதால் நினைந்தே ஆடினாள்
மனதில் நிறைந்த கன்னியின் கிளியை
மணமகன் மறந்தே ஏகினான் – ஆஹா
மணமகன் மறந்தே ஏகினான்....
சிலையினிலிருன்தோன் பூவை காதலன்
இளைய வசந்தன் ஆகினான் – ஆஹா
இளைய வசந்தன் ஆகினான்
வசந்தனின் சிறு கோயிலைப் பார்த்தே
இந்திரன் மகளே வாடினாள் ஆஹா
இந்திரன் மகளே வாடினாள்......(வனத்தில்)