நால்வரின் கழுத்திலே நானிட்ட மாலையால்
நால்வரென் துணைவியானார்
நடுவிலே நிற்பவர் யாரென்ற போதிலும்
ஏழையென் அன்னையன்றோ...(நால்வரின்)
பிள்ளையைச் சோதிக்க மனைவிபோல் மாறினால்
பெண்மைக்கு முறைமையாமோ
அம்மையே தெய்வமே அன்னையே சற்று நீ
அப்புறம் நகரலாமோ
செல்வமே வாழ்கென்று அன்னையுன் கைகளால்
என்னை நீ வாழ்த்தலாமோ...
கண்ணுக்கு ஒருவராய்க் காட்சி தந்தாலும் நீர்
பெண் மக்கள் நால்வரன்றோ
அம்மையாம் பார்வதி பிள்ளைக்குப் பரிசாக
அளித்தவர் நீவிரன்றோ
பெண்மையின் கற்போடும் பத்தினிப் பண்போடும்
பிறந்ததே உண்மையானால்
உண்மையாம் வடிவத்தை கணவனின் எதிரிலே
உலகுக்குக் காட்டுவீரோ....