ஓ......தேவ ரமணியாரே இன்றே
கண்ணில் தோன்றினீரா
கண் காணும் கலை இதுதானா.......
ஓ.....ரதி....ஓஹோ.....ரதி
ஓஹோ மயக்கும் மோகினி
கண்ணோ பல கதை பேசி
வலை வீசிடும் புரியாதோ
கண்ணில் வந்து சேர்ந்தீரே.....
கண்ணில் வந்து சேர்ந்தீரின்று
தயையுடன் எனையினி காணிரா....(ஓ..ரதி..)
நெடுங்காலமும் துடித்திருந்தேன்
பிரியகானமும் படித்திருந்தேன்
கையில் ஒதுங்கும் மலைத்தேனே
கையில் ஒதுங்கும் மலைத்தேன் கண்டு
மையலில் சிக்கினேன் கேளிரா....(ஓ..ரதி..)
கண் தூவிடும் ஒரு நெருப்பு
மனதென்னமோ தான் விருப்பு
ஆட்டமெல்லாம் தெரிந்து கொண்டேன்
ஆட்டமெல்லாம் தெரிந்தது இனி
நாடகம் என்னிடம் ஏதுக்கோ...(ஓ.....ரதி..)