வணக்கம் வணக்கம் அண்ணாச்சி
வாழ்த்துகின்றோம் அண்ணாச்சி
திட்டம் போட்டு வேலை செய்து
வெற்றிக் கண்ட அண்ணாச்சி...(வணக்கம்)
சிற்றெறும்பை போலே தினம் உழைச்சிடுவாரு
இவர் சிரிச்சிக்கிட்டு காரியத்தை முடித்திடுவாரு
பெற்றவனை போலே நம்மை காத்திடுவாரு
இவர் பழமையான எண்ணங்களை மாற்றிடுவாரு (வணக்கம்)
கண்ணியத்தை வேதமாக எண்ணிடுவாரு
இவர் கட்டுப்பாட்டை நீதியாக தொடர்ந்திடுவாரு
கடமைக்காக தன் சுகத்தை மறந்திடுவாரு
இவர் காலம் நேரம் பார்த்து நம்மை வாழ வைப்பாரு (வணக்கம்)
தம்பி முகம் கறுத்துவிட்டால் கண்கள் சிவக்கும்
தன் தாயின் முகம் வாடிவிட்டால் நெஞ்சம் துடிக்கும்
அன்பர் மனம் கலங்கிவிட்டால் அணைத்துக் கொள்வார்
இவர் அறிஞ்ஞருக்கும் அறிஞ்சராக விளக்கம் சொல்வார் (வணக்கம்)