ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை தந்தேனே
காலை மாலை காத்திருந்தேன்
காதலுக்கே காத்திருந்தேன்
குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்
குயிலைப் போலே பாடி வந்தேன் (ஆசை)
பக்கத்திலே நான் வரவா
பாடம் சொல்லித்தான் தரவா
பூப்போன்ற கன்னத்தையே
கை விரலால் நான் தொடவா
பருவம் என்னும் மேடையிலே
பார்வை சொன்ன ஜாடையிலே
பழகி வந்த பழக்கத்திலே
பகலும் இல்லை இரவும் இல்லை (ஆசை)
கண் பார்த்த போதிலே
கைக் கோர்த்த காதலே
என்னென்று சொல்லவா
என் சொந்தம் அல்லவா
எண்ணம் என்னும் மாளிகைக்கு
ஏற்றி வைத்த திருவிளக்கு
இதயம் கொண்ட காதலுக்கு
என்னை தந்தேன் நான் உனக்கு (ஆசை)
அன்பு தென்றல் வீசுதே.....
மனம் பேசுதே......
இன்பம் இன்பம் என்றதே...
ஆசை வந்த பின்னே......