நடந்து காட்டு ட்ரிட்ரியா
நடந்து காட்டு ஹை ஹைய்யா
நடந்து காட்டு நடந்து காட்டு
எனக்கு முன்னாலே
நான் வருவேன் நான் வருவேன்
உனக்கு பின்னாலே...(நடந்து)
நுகத்தடியில் அகப்படாமல் இருக்குது பாரு இது
நெருங்கி வந்த பூங்கொடியை வெறுக்குது பாரு
இது மெரட்டுது பாரு கண்ண உருட்டுது பாரு
தன் மனசுக்குள்ளே பலவிதமா நெனைக்குது பாரு (நடந்து)
குடும்பம் என்ற வண்டியிலே பூட்டிட வேணும் இதை
குறுக்கும் நெடுக்குமாக தினம் ஒட்டிட வேணும்
எடுக்கு பண்ணிகிட்டா நல்லா வாட்டிட வேணும் நான்
எதுக்கும் துணிஞ்ச பொம்பளைன்னு காட்டிட வேணும் (நடந்து)