பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : வம்புல மாட்டிவிடாதீங்கோ என் சின்னண்ணே
என்னே பாட்டெல்லாம் பாடச்சொல்லாதீங்கோ
நான் யாரு கழுவுற மீன்ல நழுவற மீனாச்சே
தானனா தானனன்னானா
தானனா என்னை பாட சொல்லாதீங்கோ ஒ ஒ ஒ
திருவாயை நான் தொறந்தா ஆஅ……ஆ…..ஆ……ஆஅ….
ஆண் : வம்புல மாட்டிவிடாதீங்கோ என் சின்னண்ணே
என்னே பாட்டெல்லாம் பாடச் சொல்லாதீங்கோ
திருவாயை நான் தொறந்தா தெருநாயும் ஒடும்…..
திருவாயை நான் தொறந்தா தெருநாயும் ஒடும்……
ஆண் : கச்சேரி நான் பாட ஒப்பாரி கண்ணீர் விடும்
ஹொ ஹொ ஹொ ஹோய்..
ஆண் : வம்புல மாட்டிவிடாதீங்கோ என் சின்னண்ணே
என்னே பாட்டெல்லாம் பாடச் சொல்லாதீங்கோ…..ஓ…
ஆண் : பாடியதில்லை ஒழுங்கா நான் பல்லவி பாட்டு
பாடுவதெல்லாம் எப்போதும் பஞ்சப்பாட்டு
தப்பு தப்பா நான் பாடி வெச்சாலும்
என்னை தண்டிக்க ஆளே ஏது
ஆண் : ஜேசுதாசும் எஸ்பிபியும் ஊருல கிடையாது
மெட்டு போட்டு பாடச் சொன்னா டல்லா பாடுவேன்
துட்டு போட்டு பாடச் சொன்னா நல்லா பாடுவேன்
ஆனது ஆகட்டும் அபஸ்வரம் கூடட்டும்
செம்மங்குடி குன்னக்குடி
என்னை கொஞ்சம் மன்னிக்கட்டுமே
ஆண் : வம்புல மாட்டிவிடாதீங்கோ என் சின்னண்ணே
என்னே பாட்டெல்லாம் பாடச் சொல்லாதீங்கோ…..ஓ…
ஆண் : கவனிச்சுப் பாரு நான் காட்டும் ஒலியும் ஒளியும்
கற்பனையெல்லாம் என்னோட ஒழியும் ஒழியும்
போடுற பாட்ட பார்த்து தொலைக்கணும்
அதுதான் தொலைக்காட்சி
சூப்பர் ஹிட்டு பாட்டையும் சொதப்பி பாடுவேன்
இது என் அரசாட்சி
ஆண் : ஆளுக்கொரு பாடல் போட தடையும் இல்லையே
அய்யாவோட சானலில் என்றும் தடங்கலில்லையே
ராகமும் தெரியல தாளமும் தெரியல
ஜன கன மனகூட சரிவர தெரியல்லையே
ஆண் : அப்புறம் ஏன்யா பாடறே
போனாப் போவுது பழைய பாட்டை
ஒண்ண பாடித் தொலை..
ஆண் : அம்பாள் மனம் கனிந்து உருகி கடை கண் பார்
அன்பால் என்னை பாடச் சொன்னது
உந்தன் வம்பா ஹ ஹ ஹ
ஆண் : வம்புல மாட்டிவிடாதீங்கோ என் சின்னண்ணே
என்னே பாட்டெல்லாம் பாடச் சொல்லாதீங்கோ
ஆண் : திருவாயை நான் தொறந்தா தெருநாயும் ஒடும்..
திருவாயை நான் தொறந்தா தெருநாயும் ஒடும்..
கச்சேரி நான் பாட ஒப்பாரி கண்ணீர் விடும்
ஹொ ஹொ ஹஹ ஹொ ஹொ
ஆண் : வம்புல மாட்டிவிடாதீங்கோ என் சின்னண்ணே
என்னே பாட்டெல்லாம் பாடச் சொல்லாதீங்கோ…..ஓ…ஓஓ