பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசை அமைப்பாளர் : தேவேந்திரன்
ஆண் : வாராய் என் தோழா வாராயோ
மணப் பந்தல் காண வாராயோ
பதினாறும் பெற்று தலைவா நீயும்
பெருவாழ்வு காண வாராயோ
குழு : வாராய் என் தோழா வாராயோ
மணப் பந்தல் காண வாராயோ
ஆண் : இள மீசை கொண்ட குமரா
எட்டு முழ வேஷ்டி சூடும் அழகா
கலையாத கிராப்பு தலையா உன்
கண்ணென்ன காதல் வலையா
ஆண் : சரியான ஜோடி பிடிச்சாயோ
லவ் பண்ண நீயும் துடிச்சாயோ
குழு : சரியான ஜோடி பிடிச்சாயோ
லவ் பண்ண நீயும் துடிச்சாயோ
வாராய் என் தோழா வாராயோ
மணப் பந்தல் காண வாராயோ…
ஆண் : பொதுவாக சொல்லப் போனால்
நல்ல பெண்டாட்டி தாசன் நீயே
பி.டி.உஷாவைப் போலே அவள்
பின்னாடி ஓடுவாயே….
ஆண் : புடவைகள் நீயும் துவைப்பாயோ
தினந்தோறும் சோறு சமைப்பாயோ
குழு : புடவைகள் நீயும் துவைப்பாயோ
தினந்தோறும் சோறு சமைப்பாயோ
வாராய் என் தோழா வாராயோ
மணப் பந்தல் காண வாராயோ
ஆண் : அளவோடு பிள்ளை பெற்று
நீ வளமாக வாழ வேண்டும்
எளிதான வழிகள் உண்டு
அது எல்லோர்க்கும் தெரியும் இன்று
ஆண் : விளையாட்டில் இன்பம் மலராதோ
விலைவாசி போல உயராதோ
விளையாட்டில் இன்பம் மலராதோ
விலைவாசி போல உயராதோ
ஆண் : வாராய் என் தோழா வாராயோ
மணப் பந்தல் காண வாராயோ
பதினாறும் பெற்று தலைவா நீயும்
பெருவாழ்வு காண வாராயோ
குழு : வாராய் என் தோழா வாராயோ
மணப் பந்தல் காண வாராயோ