பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : வாடி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது வளையல் ஓசைதான்
எவளுக்கும் என் மேல் ஆசை தான்
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி
ஆண் : ஆஹா வாடி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது வளையல் ஓசைதான்
எவளுக்கும் என் மேல் ஆசை தான்
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி
குழு : ……………………….
ஆண் : ஆஹா ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண் : ராதா….உனக்கொரு தோதா
நான்தான் வாலிபக் காளை
உனக்கே வேறே என்னடி வேலை
மாலா இடை ஒரு நூலா
நான் தான் இத்தனை நாளா
உனை எதிர்பார்த்தேன் ராத்திரி பகலா
ஆண் : ஒரே சுகம் ஒரே தரம்
வழங்கலாம் நானும் மயங்கலாம்..
மாலை பொழுதினில் அருகில் வா….
ஆண் : வாடி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது வளையல் ஓசைதான்
எவளுக்கும் என் மேல் ஆசை தான்
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி ஹே
ஆண் : ஆடை சுமந்தொரு ஓடை
நாளும் பார்வையில் ஓடும்
நானதில் நீந்தும் மன்மத ஓடம் ஹே
போதை தலை வரை ஏறும்
கால்கள் நடனங்கள் ஆடும்
இளமையின் கீதம் நயனங்கள் பாடும்
ஆண் : இதோ இதழ் இதோ இடை
அணைக்கலாம் தீயை அணைக்கலாம்
ஆசை அருவியில் குளித்திட வா வா
ஆண் : வா…டி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது ………வளையல் ஓசைதான்……….
எவளுக்கும்………. என் மேல் ஆசை தான்…………..
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி அரே ரே ரே
ஆண் : ……………………….