பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ ஓஓஓஓஓ
பெண் : கண்ணன் யாருக்கும் சொந்தம்
என்றும் ராதைக்கு சொந்தம்
ஜென்மம் தந்த பந்தம் அன்பே ஆனந்தம்
உயிரே வருக உறவை தருக
பெண் : கண்ணன் யாருக்கும் சொந்தம்
என்றும் ராதைக்கு சொந்தம்
ஜென்மம் தந்த பந்தம் அன்பே ஆனந்தம்
உயிரே வருக உறவை தருக
பெண் : இமை வந்து அடிப்பதால்
விழியென்ன வெறுக்குமா
பொன்னென்ன புண்ணாகுமா
பெண் : சிறகுகள் அடிப்பதால்
கிளிக்கென்ன வலிக்குமா
கோபங்கள் உண்டாகுமா
பெண் : உன் பாதங்கள் என் தேகங்கள்
கண்ணா என்னை கண்ணால் பாருங்கள்
பெண் : கண்ணன் யாருக்கும் சொந்தம்
என்றும் ராதைக்கு சொந்தம்
ஜென்மம் தந்த பந்தம் அன்பே ஆனந்தம்
உயிரே வருக உறவை தருக
பெண் : தனிமையில் தவிக்கிறேன்
தனக்குள்ளே துடிக்கிறேன்
பேசாத பெண்ணாகினேன்
பெண் : உன்னை நம்பி இருக்கிறேன்
உயிரை நான் சுமக்கிறேன்
நெஞ்சோடு போராடினேன்
பெண் : உன் வாசகம் என் யாசகம்
நீங்கள் சொன்னால் பெண்மை ஆளாகும்
பெண் : கண்ணன் யாருக்கும் சொந்தம்
என்றும் ராதைக்கு சொந்தம்
ஜென்மம் தந்த பந்தம் அன்பே ஆனந்தம்
உயிரே வருக உறவை தருக