பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ் பி சைலஜா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : உன்னை போற்றி எழுத
புலவன் இன்று அருகில் இல்லை
பெண் : பரவாயில்லை
ஆண் : உன்னை வாழ்த்தி எழுத
கவிஞன் இங்கு அருகில் இல்லை
பெண் : பரவாயில்லை
ஆண் : உந்தன் காவலுக்கு யாருமில்லை
பெண் : பரவாயில்லை
ஆண் : உள்ளம் சேர்வதற்கு வேதமில்லை
பரவாயில்லை
ஆண் : உன்னை போற்றி எழுத
புலவன் இன்று அருகில் இல்லை
பெண் : பரவாயில்லை
ஆண் : உன்னை வாழ்த்தி எழுத
கவிஞன் இங்கு அருகில் இல்லை
பெண் : பரவாயில்லை…….ஹோ
ஆண் : பூங்காற்றுதான்……
பெண் : நீயல்ல
ஆண் : புல்லாங்குழல்……..
பெண் : நானல்ல
ஆண் : என் காதலி என் கண்மணி
ஏன் மௌன கீதம்
ஆண் : பொன் மேகமே…..
பெண் : புகழாதே
ஆண் : உன் மோகமே……
பெண் : அலையாதே
ஆண் : வேர் வாடுது நீர் தேடுது
வா இந்த நேரம்
ஆண் : உடல் கொதிக்கும்….
பெண் : பரவாயில்லை
ஆண் : உயிர் துடிக்கும்……
பெண் : பரவாயில்லை
ஆண் : தங்க மாங்கனி தாங்கும் பூங்கொடி
தோளில் ஆடாதா……
ஆண் : ஒ…..உன்னை போற்றி எழுத
புலவன் இன்று அருகில் இல்லை
பெண் : பரவாயில்லை…..
ஆண் : ஹோஹோ உன்னை வாழ்த்தி எழுத
கவிஞன் இங்கு அருகில் இல்லை
பெண் : பரவாயில்லை……ஹா
பெண் : பெண் பித்தனா…..
ஆண் : ஆமாம்மா…
பெண் : என் பக்தனா………
ஆண் : ஆமாம்மா
பெண் : உன் பூஜையை என் கோவிலில்
நான் ஏற்கவில்லை
பெண் : வீண் வேலைதான்……
ஆண் : விடமாட்டேன்
பெண் : என் வீம்புதான்……..
ஆண் : வரம் கேட்டேன்
பெண் : பெண் கோவம்தான்
பொல்லாதது நீ பாத்ததில்லை
பெண் : ஒத விழலாம்……
ஆண் : பரவாயில்லை
பெண் : புடிபடலாம்…….
ஆண் : பரவாயில்லை
பெண் : கானல் நீரிலே மீன் பிடிக்கத்தான்
உன்னால் ஆகாதே
ஆண் : அஹ ஹா….
பெண் : உன்னை மாலை சூடும்
மயக்கம் இந்த மனதில் இல்லை
ஆண் : பரவாயில்லை…
பெண் : ஹா……உந்தன் காதல் கனவு
எதுவும் இந்த கண்ணில் இல்லை
ஆண் : நோ ப்ராப்ளம் ஹான்
பெண் : உன் மேல் ஆசை வைத்த பாவை இல்லை
ஆண் : பரவாயில்லை பரவாயில்லை
பெண் : உன் போல் ஆள் எனக்கு தேவை இல்லை
ஆண் : பரவாயில்லை
பெண் : லல்லா லலலா ல்லலல்லா லலலல்லா
ஆண் : பப்பாரப்பபப்பாப்பரப்பா
தாராராரீ ரா ரா ரா ரா ரா ர
தாரா தரா தாரா ரா ரா
பெண் : பப்பாரப்பபப்பாப்பரப்பா…..