உனக்கொருத்தி பொறந்திருக்கா
அவள ஏய்க்காதே நீ
உனக்கெனவே வளந்திருக்கா
அவள வெறுக்காதே நீ
ஹே ஏ மச்சான் உள்ளதச் சொன்னேன்
நீ கேட்டா நல்லதச் சொல்வேன்
ஏ மச்சான் உள்ளதச் சொன்னோம்
நீ கேட்டா நல்லதச் சொல்வோம்.....
நாம வாழும் வாழ்க்கையே
துணையோடு வாழத்தான் இருக்குது இருக்குது
நாம வணங்கும் சாமியும்
நல்ல ஜோடியோடதான் சிரிக்குது சிரிக்குது
ஒண்ணோட ஒண்ணு வந்து சேந்தாக்கா
தன்னால பாட்டு வரும் சின்னாத்தா
ஆணோட பொண்ணு வந்து சேந்தாக்கா
என்னென்ன இன்பம் வரும் பொன்னாத்தா..(உனக்கொருத்தி)
தாங்காத குடிகாரனுக்கும்
நல்ல தன்மை உள்ள ஒரு தாரம் வந்தா
பாங்காக அத மாத்தி வெச்சு
அவ பக்குவமா வழி நடத்திச் செல்வா
ஹே வரவுக்குள்ள செலவையும்
நடத்துறவ மனைவி தான்
ஹே வழிய விட்டுத் தவறினா
அடக்குறவ மனைவி தான்
தனியா நீயும் தாந்தோன்றித்தனமா
திரிஞ்சா எதுவும் முடியாதப்பா....(உனக்கொருத்தி)
ஓர் குலக் கொழுந்து வேணுமின்னு
தந்தை தர்மம் செஞ்சு கையேந்தி நிக்க
ஸ்ரீதேவி அவ கண் திறந்து
ஊர் தவம் இருந்த பொண் பொறக்க வைக்க
ஹோ மின்னாமல் மின்னுறா மீனாட்சி அம்மனா
எந்நாளும் உன்னையே கண்ணாக எண்ணுறா
வேண்டாம் என்று வரும் போது சொன்னால்
வேண்டும் போது கெடைக்காதப்பா..(உனக்கொருத்தி)