காத்தே காத்தே
என் மாமன் மனசுக்குள்ளே கொஞ்சம்
போவியா போவியா
முகம் பாத்தே பாத்தே
நான் தூண்டில் புழுவா துடிக்கும் சேதி
சொல்வியா சொல்வியா
ஒருவருக்கும் இரக்கம் இல்லையே
உதவி செய்ய யாரும் வல்லியே
அருவிக்கர ஓரம் அந்தி நேரம் அசஞ்சு ஆடிடும்
காத்தே......காத்தே......
சில்லென்று பூத்திருக்கும் செவ்வந்திப் பூவே பூவே
என்னைப் போல் நீயும் ஒரு பெண்ணடி
பெண் கொள்ளும் வேதனைகள்
பெண் தானே சொல்ல வேணும்
பொல்லாத மௌனம் இங்கு என்னடி
தூண்டா விளக்கு மேலே திரி போல நான் எரிய
வேண்டா வெறுப்புக் காட்டும் எம் மாமன் தானறிய
பூஞ்சிட்டுப் போல் நானே போய்ச் சொல்லடி
பூவே பூவே.. என் மாமன் மனசுக்குள்ளே கொஞ்சம்
அலை என்னும் தலையை ஆட்டி
விளையாடும் ஓடை நீரே
நீராடும் மாமன் காதில் கூவணும்
கலையாத நெஞ்சம் கலந்து
கனிவோடு என்னைக் கலந்து
உன்னாலே எல்லாம் சொல்ல தீரணும்
நிறம் காட்டும் வானவில்லே மனம் காட்ட நீ வரணும்
ஒரு சோடி ஒண்ணா சேர வரம் வாங்கி நீ தரணும்
நீ சென்று வா சேதியை கொண்டு வா
மனசே மனசே என் மாமன் மனசுக்குள்ளே கொஞ்சம்……