மாயி மாயி மகமாயி
அவ திருநாளாம் இது திருநாளாம்
திருவிழா இது திருவிழா
பாரி பாரி மொளப் பாரி
இத வளத்தா நல்லத தருவாளாம்
ஒரு விழா இது பெருவிழா
மஞ்ச மொகத்துக்காரி
இவ மங்கலம் தந்திடும் மாரி
பூவலங்காரி இவ பொன்னு கொடுக்கும் சிங்காரி
மாயி மாயி மகமாயி
முத்து பதித்தின ரத்தினத் தேரு சுத்துது வீதியிலே
அந்த வானத்து மேலே வரும் பௌர்ணமி போலே
பக்தி கொடுக்குற உத்தமியே இவ
வந்தது ஆதியிலே அந்த சூரியன் போலே
அந்தச் சந்திரன் போலே
சொக்கி முகம் பாத்தா சொக்கி விழ வேணும்
தப்பு வழி போனா சிக்கிக் கொள்ள வேணும்
தெருவில் நம்ம கோலம் பூக் கோலம்
ஒரு மாவிளக்கு எடுத்து படைக்கலாம்
அம்மன் கோயிலிலே……..(மாயி மாயி)
குத்துவிளக்குல முத்துமணிச் சுடர்
மின்னுற சாடையிலே அந்த
மாப்பிள கண்ணு கண்டு மயங்குது பொண்ணு
சித்திர வந்ததும் நிச்சயம் பண்ணணும் ரத்தினமே ரதியே
நீ ரெண்டுல ஒண்ணு அத மனசுல எண்ணு
தெப்பக் கொள ஓரம் தேடுறது யார
நிதம் நிதம் பாடும் மாமன் அவன் பேர
சிறு பொண்ணு மனசெல்லாம் ஓம் மேல
நான் ஆச வெச்சா கணக்கா நடக்குமே
அம்மனின் கோயிலிலே.....(மாயி மாயி)