Tamil Songs lyrics · 1966
Ulagamengum Orey lyrics from Nadodi (1966) movie - நாடோடி திரைப்படத்திலிருந்து உலகமெங்கும் ஓரே பாடல் வரிகள்
உலகமெங்கும் ஓரே பாடல் 1966-ல் வெளியான நாடோடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · பாடியவர்: பி. சுசீலா
Ulagamengum Orey is a song from the 1966 Tamil film Nadodi (1966), written by Kannadasan and sung by P. Susheela.
- Movie Name
- Nadodi (1966) 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- நாடோடி
- Year
- 1966
- Lyrics
- Kannadasan
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றிப் பேசும் மொழி
உருவமில்லா தேவன் மொழி
உலகமெங்கும் ஓரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றிப் பேசும் மொழி
உருவமில்லா தேவன் மொழி
பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
இரவு ஒன்று பருவங்கள் வேறு
இன்பம் ஒன்று உருவங்கள் வேறு
கடலும் வானும் பிரித்து வைத்தாலும்
காதல் வேகம் காற்றிலும் இல்லை
உடல்கள் இரண்டு வேறுபட்டாலும்
ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்
உலகமெங்கும் ஓரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றிப் பேசும் மொழி
உருவமில்லா தேவன் மொழி
ஒன்றே வானம் ஒன்றே நிலவு
ஓடிச் சென்ற ஆண்டுகள் கோடி
ஒன்றே வானம் ஒன்றே நிலவு
ஓடிச் சென்ற ஆண்டுகள் கோடி
காதல் பேசி கவிதையில் ஆடி
கணைகள் தேடி கலந்தவர் கோடி
கோடி மனிதர் பேசிய பின்னும்
குறைவில்லாமல் வளர்வது காதல்
நாடு விட்டு நாடு சென்றாலும்
தேடிச் சென்று சேர்வது காதல்
தேடிச் சென்று சேர்வது காதல்
உலகமெங்கும் ஓரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றிப் பேசும் மொழி
உருவமில்லா தேவன் மொழி
Ulagamengum Orey song FAQ
Who sang Ulagamengum Orey?
Ulagamengum Orey was sung by P. Susheela for the 1966 Tamil film Nadodi (1966).
Who wrote the lyrics of Ulagamengum Orey?
The lyrics of Ulagamengum Orey were written by Kannadasan.
Which movie is the song Ulagamengum Orey from?
Ulagamengum Orey is from the Tamil film Nadodi (1966), released in 1966. The film has 10 songs on Tamilputhumai.
உலகமெங்கும் ஓரே பாடலை பாடியவர் யார்?
உலகமெங்கும் ஓரே பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.