Skip to content

Popular

Tamil Songs lyrics · 1976

Ulagam Perithu lyrics from Gruhapravesam movie - கிரஹப்பிரவேசம் திரைப்பட பாடல் வரிகள்

Ulagam Perithu பாடல் 1976-ல் வெளியான கிரஹப்பிரவேசம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்

Ulagam Perithu is a song from the 1976 Tamil film Gruhapravesam, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by T. M. Soundararajan.

WhatsApp
Year
1976
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : உலகம் பெரிது சாலைகள் சிறிது
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
உலகம் பெரிது சாலைகள் சிறிது
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
சுமைகள் அதிகம் சொந்தமும் அதிகம்
இறைவனின் கணக்கில் இதுதான் உலகம்

ஆண் : உலகம் பெரிது சாலைகள் சிறிது
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்

ஆண் : வாடா கண்ணா வழித்துணை நீதான்
வாழ்வெனும் சாலை அமைத்தவன் நீ
வாடா கண்ணா வழித்துணை நீதான்
வாழ்வெனும் சாலை அமைத்தவன் நீ
வாசலில் நின்று பூஜைகள் ஒலித்தல்
வழி விடுவாய் என அறிந்தவன் நான்

ஆண் : பயணம் முழுவதும் உன்னைப்
பாடிக் கொண்டிருந்தால் பயமில்லையே..
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்

ஆண் : தானே இயங்கும் கருவிகள் எல்லாம்
சாலையில் இங்கே உறங்குதடா
வானில் இருந்தே இயக்குகிறாய் நீ
மானிட உலகம் நடக்குதடா

ஆண் : விதியின் இயக்கம்
இந்த வீதிகள் தோறும் தெரியுதடா
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்

ஆண் : உலகம் பெரிது சாலைகள் சிறிது
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்

ஆண் : வருஷா வருஷம் ஒவ்வொரு கோடி
மக்கள் கூட்டம் பெருகுதடா
வழிகள் தோறும் தலைகளைப் பார்த்தால்
பொதுக் கூட்டம் போல் தெரியுதடா
படைக்கும் தொழிலை
கொஞ்சம் நிறுத்திக் கொண்டால்
என்ன பரந்தாமா பரந்தாமா

ஆண் : ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
சுமைகள் அதிகம் சொந்தமும் அதிகம்
இறைவனின் கணக்கில் இதுதான் உலகம்

ஆண் : உலகம் பெரிது சாலைகள் சிறிது
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்

Lyrics(English)

Male : Ulagam perithu saalaigal sirithu
Oli koduththaal vazhi kidaikkum
Ulagam perithu saalaigal sirithu
Oli koduththaal vazhi kidaikkum
Sumaigal adhigam sonthamum adhigam
Iraivanin kanakkil idhuthaan ulagam

Male : Ulagam perithu saalaigal sirithu
Oli koduththaal vazhi kidaikkum

Male : Vaadaa kanna vazhithunai neethaan
Vaazhvenum saalai amaiththavan nee
Vaadaa kanna vazhithunai neethaan
Vaazhvenum saalai amaiththavan nee
Vaasalil nindru poojaigal oliththal
Vazhi viduvaai ena arinthavan naan

Male : Payanam muzhuvathum unnai
Paadi kondirunthaal payamillaiyae
Oli koduththaal vazhi kidaikkum

Male : Thaanae iyangum karuvigal ellaam
Saalaiyil ingae uranguthadaa
Vaanil irunthae iyangukiraai nee
Maanida ulagam nadakkuthadaa

Male : Vithiyin iyakkam
Intha veethigal thorum theriyuthadaa
Oli koduththaal vazhi kidaikkum

Male : Ulagam perithu saalaigal sirithu
Oli koduththaal vazhi kidaikkum

Male : Varushaa varusham ovvoru kodi
Makkal koottam peruguthadaa
Vazhigal thorum thalaigalai paarththaal
Pothu koottam pol theriyuthadaa
Padaikkum thozhilai
Konjam niruththi kondaal
Enna paranthaamaa paranthaamaa

Male : Oli koduththaal vazhi kidaikkum
Sumaigal adhigam sonthamum adhigam
Iraivanin kanakkil idhuthaan ulagam

Male : Ulagam perithu saalaigal sirithu
Oli koduththaal vazhi kidaikkum

Ulagam Perithu song FAQ

Who sang Ulagam Perithu?

Ulagam Perithu was sung by T. M. Soundararajan for the 1976 Tamil film Gruhapravesam.

Who wrote the lyrics of Ulagam Perithu?

The lyrics of Ulagam Perithu were written by Kannadasan.

Who composed the music for Ulagam Perithu?

The music for Ulagam Perithu was composed by M.S.Viswanathan.

Which movie is the song Ulagam Perithu from?

Ulagam Perithu is from the Tamil film Gruhapravesam, released in 1976. The film has 5 songs on Tamilputhumai.

Ulagam Perithu பாடலை பாடியவர் யார்?

Ulagam Perithu பாடலை பாடியவர் டி. எம். சௌந்தரராஜன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கிரஹப்பிரவேசம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்