மானத்துலே மீன்னிருக்க மருதையிலே நான்னிருக்க
சேலத்திலே நீயிருக்க சேருவது எக்காலம்
ஆ ஆ ஆ ஆ ஆ
உதயம் வருகின்றதே மலர்கள் மலர்கின்றதே
பிரிவில் துடிக்கின்ற புள்ளி மான் ஒன்று உறவை அழைக்கின்றதே
உதயம் வருகின்றதே மலர்கள் மலர்கின்றதே
பிரிவில் துடிக்கின்ற புள்ளி மான் ஒன்று உறவை அழைக்கின்றதே
உதயம் வருகின்றதே
அன்பில் வாழும் பூ போன்ற உள்ளம்
வாடும் முன்னே வரவேண்டும் கண்ணா
ஆடும் காற்றில் ஆடும் காற்றில் அலைபாயும் கொடியை
தாவி வந்து தருவாயொ கண்ணா
ஓடி வா பாடி வா வாழ்விலே என்னை பந்தாடவா
உதயம் வருகின்றதே மலர்கள் மலர்கின்றதே
பிரிவில் துடிக்கின்ற புள்ளி மான் ஒன்று உறவை அழைக்கின்றதே
உண்மை என்று நான் கொண்ட சொந்தம்
கண் மை போல கறைந்தோடலாமா
ராகம் பாடி ராகம் பாடி நீ தந்த வாழ்வு
காலம் யாவும் பொன்னாக வேண்டும்
இன்னும் நான் சொல்லவோ தேடி என் மனம் தேனாகவோ
உதயம் வருகின்றதே மலர்கள் மலர்கின்றதே
பிரிவில் துடிக்கின்ற புள்ளி மான் ஒன்று உறவை அழைக்கின்றதே
உதயம் வருகின்றதே