ஆயிரம் கோடி காலங்களாக ஆனந்த லீலையின் நாயகன் நீயே
ஆயிரம் கோடி காலங்களாக ஆனந்த லீலையின் நாயகன் நீயே
ஆயிரம் கோடி
காற்றினில் உயிராக கலந்தாடுவாய் நீரினில் அலையாக நின்றாடுவாய்
மார்கழி மாட மலர்களில் ஆடும் வாசமும் நீயே வன்னமும் நீயே
ஆயிரம் கோடி காலங்களாக ஆனந்த லீலையின் நாயகன் நீயே
ஆயிரம் கோடி
நாதமும் நீயே கீதமும் நீயே ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நாதமும் நீயே கீதமும் நீயே நாயகன் காக்கும் பரந்தாம்மா
பாற்கடல் அமுதாக வானவர் விருந்தாக மூவுலகாளும் வேதம் நீயே
ஆயிரம் கோடி
ஆத்மாவின் பொருளாக கீதையிலே அருள் காக்கும் சுடர் வீசும் பாதையிலே
உலகினை நாளும் நல் வழி ஒற்றும் காலடி நீயே மாதவன் நீயே
ஆயிரம் கோடி காலங்களாக ஆனந்த லீலையின் நாயகன் நீயே
ஆயிரம் கோடி