பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஹா ஹா ஆஹா ஹா….
ஆஹா ஹா ஆஹா ஹா….
ஏஹே ஹே ஏஹே ஹே
ஏஹே ஹே…. ஏஹே ஹே….
ஆண் : தொட்டது அனைத்திலும்
வெற்றி கிடைத்திடும்
வாடா என் ராஜா
நெஞ்சில் உண்மை இருக்குது
நேர்மை இருக்குது வாடாதே ராஜா
ஏழை நான் அன்று கோழைதான்
வீரன் நான் இன்று சூரன்தான்
ஆண் : கை தொட்டது அனைத்திலும்
வெற்றி கிடைத்திடும்
வாடா என் ராஜா
நெஞ்சில் உண்மை இருக்குது
நேர்மை இருக்குது வாடாதே ராஜா…
ஆண் : அச்சத்தில் வாழும் பேர்தான்
அச்சாணி இல்லா தேர்தான்
முச்சந்தி முன்னால் நிற்கும்
எங்கும் ஓடாது…..
ஆண் : வீரத்தில் வாழும் யாரும்
வேங்கைக்கு நேர்தான் ஆகும்
மஞ்சத்தைப் போரில் வெல்லும்
அஞ்சி நில்லாது…..
ஆண் : முன் வைத்தக் காலை நீயும்
பின்னால் வைக்காதே
தன்மானம் கெட்டுப் போனால்
சும்மா நிக்காதே
ஆண் : {எட்டி நின்று குற்றம் சொல்லும்
பேர் வரட்டும்
நல்ல ரத்தம் உள்ளவர்கள்
நேர் வரட்டும்} (2)
ஆண் : உரம் இருந்தால்
திறம் இருந்தால்
வரம் இருந்தால்
ஆண் : தொட்டது அனைத்திலும்
வெற்றி கிடைத்திடும்
வாடா என் ராஜா
நெஞ்சில் உண்மை இருக்குது
நேர்மை இருக்குது வாடாதே ராஜா
ஏழை நான் அன்று கோழைதான்
வீரன் நான் இன்று சூரன்தான்
ஆண் : உள்ளத்தில் கள்ளம் வைத்து
ஊர் சொத்தில் கன்னம் வைக்கும்
பொல்லாரைத் தட்டிக் கேட்கும்
காலம் வந்தாச்சு….
ஆண் : ஏழைகள் ஊமை அல்ல
எந்நாளும் ஆமை அல்ல
முப்பாட்டன் காலம் இப்போ
காற்றில் போயாச்சு….
ஆண் : குத்துக்கள் வாங்கி வாங்கி
ரோசம் உண்டாச்சு
ஆண் : கோட்டைகள் எகிறிப் போகும்
வேளை வந்தாச்சு
ஆண் : {தர்மத்துக்கு சக்தி
என்ன பாக்குறியா
சத்தியத்தின் தத்துவத்தக்
கேக்குறியா} (2)
ஆண் : படை எடுத்தேன்
பகை முடிப்பேன்
அதில் ஜெயிப்பேன்
ஆண் : தொட்டது அனைத்திலும்
வெற்றி கிடைத்திடும்
வாடா என் ராஜா
நெஞ்சில் உண்மை இருக்குது
நேர்மை இருக்குது வாடாதே ராஜா
ஏழை நான் அன்று கோழைதான்
வீரன் நான் இன்று சூரன்தான்
ஆண் : கை தொட்டது அனைத்திலும்
வெற்றி கிடைத்திடும்
வாடா என் ராஜா
நெஞ்சில் உண்மை இருக்குது
நேர்மை இருக்குது வாடாதே ராஜா
விசில் : …………………