பாடகர்கள் : இளையராஜா மற்றும் சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : என் காவிரியே……
கண்ணீர் எதற்கு
ஆண் : என் காவிரியே……
கண்ணீர் எதற்கு
தெய்வமே உன் நெஞ்சம்
வாடி விடக் கூடாது
வாடினால் என் நெஞ்சம்
தாங்கும் நிலைதான் ஏது
ஆண் : என் காவிரியே……
கண்ணீர் எதற்கு
பெண் : தீயினால் சுட்ட புண்
சீக்கிரம் ஆறலாம்
நாவிலே சுட்டதால்
வந்த வடு ஆறுமா
பெண் : ஊரிலே நம் கதைகள் தான்
அவர்க்கு தினம்
பொழுது போக்குத்தான்
பெண் : அன்பு ஒரு நோய் தானே
மருந்து நல் அன்பு தான்
இன்பம் அதன் சேய் தானே
இங்கு அது தான் இல்லையே
ஆண் : கண்மணி காத்திரு
கனவுகள் நினைவுகள்
கனிந்திடும் கலங்காதே
பெண் : உன் காலடியே……
என்றும் எனக்கு
ஆண் : தாலியை கோவிலாய்
பார்த்தவள் நீ….யடி
வேள்வியே வாழ்க்கையாய்
கொண்டவள் தா…னடி
ஆண் : உன் விழியில் நீர் என்றால்
எனது நெஞ்சிலே உதிரமே
ஊர் என்னை மிதித்தால் கூட
பூமியாய் தாங்குவேன்
நீ என்னை புரிந்தால் போதும்
உலகையே வாங்குவேன்
ஆண் : கண்மணி காத்திரு
கனவுகள் நினைவுகள்
கனிந்திடும் கலங்காதே
ஆண் : என் காவிரியே……
கண்ணீர் எதற்கு
தெய்வமே உன் நெஞ்சம்
வாடி விடக் கூடாது
வாடினால் என் நெஞ்சம்
தாங்கும் நிலைதான் ஏது
ஆண் : {என் காவிரியே……
கண்ணீர் எதற்கு} (2)